Close Menu
    What's Hot

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!
    அரசியல்

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    Editor web2By Editor web2July 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Madras High Court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெ. பாலசுப்பிரமணி தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக கூறப்படும் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும், திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், சீனிவாசன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்வைத்ததாகக் கூறப்படும் குதிரை பேர குற்றச்சாட்டுகளையும் சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

    இந்த மனுவை தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது.

    விசாரணையின் போது, குதிரை பேரம் தொடர்பான புகாரில் மாநில காவல்துறை ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், அந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

    மேலும், செய்தித்தாள்கள், தொலைக்காட்சி செய்திகள் அல்லது சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் மட்டும் ஒரு புலனாய்வு அமைப்பிலிருந்து மற்றொரு அமைப்புக்கு விசாரணையை மாற்ற முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மாநில காவல்துறையின் விசாரணை முற்றிலும் முடங்கியிருப்பது அல்லது உண்மையை கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டிருப்பது போன்ற விசேஷ சூழ்நிலைகளில் மட்டுமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியும் என்றும் நீதிமன்றம் விளக்கியது.

    அத்துடன், பொதுநல வழக்குகள் என்பது சமூகத்தில் குரலற்ற மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் சக்திவாய்ந்த சட்ட ஆயுதமாகும். அவை பொதுநலனுக்காகவும், சட்டத்தின் ஆட்சியை அனைவருக்கும் சமமாக உறுதிப்படுத்தவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, சிபிஐ விசாரணை கோரிய பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    CBI HorseTradingCase MadrasHighCourt TamilNaduPolitics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleIMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!
    Editor web2
    • Website

    Related Posts

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    July 17, 2026

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    July 17, 2026

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    பிக் பாஸ் சீசன் 10!. முன்கூட்டியே களமிறங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.