Close Menu
    What's Hot

    பெண் கல்வியை ஊக்குவிக்க குழந்தை திருமணத்தை கைவிடுங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்.  

    2026 FIFA இறுதிப்போட்டி: அர்ஜென்டினா – ஸ்பெயின் பலப்பரீட்சை; மெஸ்ஸிக்கு மேலும் ஒரு வரலாற்று வாய்ப்பு

    3-வது முறையாக தேசிய விருது… இது இறைவனின் அருள்… ரசிகர்களுக்கே இந்த விருது சொந்தம் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பெண் கல்வியை ஊக்குவிக்க குழந்தை திருமணத்தை கைவிடுங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்.  
    தமிழ்நாடு

    பெண் கல்வியை ஊக்குவிக்க குழந்தை திருமணத்தை கைவிடுங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்.  

    Editor TN TalksBy Editor TN TalksJuly 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    025 aadav
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவண்ணாமலை  மாவட்டம் ஜவ்வாதுமலை  26-வது கோடை விழா ஜமுனாமரத்தூரில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

    இந்த கோடைவிழாவில் தமிழ்நாடு பொதுத்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கோடைவிழா  மற்றும் மலர் கண்காட்சி,  அனைத்து துறை  பணி  விளக்க  கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்தனர் . அத்துடன் 65.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிவுற்ற திட்டப்பணிகளையும் திறந்து வைத்தனர் .

     மேலும் விழாவில் ரூபாய் 111 கோடியே 25 லட்சம் மதிப்பில் 27532 பயனாளிகளுக்கு  அரசின் நலதிட்ட உதவிகளையும் வழங்கினார்கள்.

    025 aadav A

    இவ்விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ்  அர்ஜுனா, தமிழக அரசு பொறுப்பெற்றது முதல் பெண்கள், இளைஞர்கள், பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

    போதை கலாச்சாரத்தை வேரோடு அழிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார். பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பெண்களின் கல்வியை மாநிலம் முழுவதும் கொண்டுசெல்ல திட்டங்கள்  செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அமைச்சர்,

     ‘பெண் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்; பெண்கள் கல்வியே ஒரு சமூகத்தின் நிலையான வளர்ச்சிக்கு அடித்தளமாகும். எனவே, அதற்கு எதிரான குழந்தை திருமணம் போன்றவைகளை கைவிட வேண்டும்‘ என வலியுறுத்தினார்.

    மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்குவதுடன், மக்களுக்கு தேவையான மருத்துவ, கல்வி போன்ற வசதிகளையும் ஏற்படுத்தப்படும் என்றார்.

    இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க், போளூர்   தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    Aadhav Arjuna Child Marriage Girl Education Minister Aadhav Arjuna Women Empowerment
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2026 FIFA இறுதிப்போட்டி: அர்ஜென்டினா – ஸ்பெயின் பலப்பரீட்சை; மெஸ்ஸிக்கு மேலும் ஒரு வரலாற்று வாய்ப்பு
    Editor TN Talks

    Related Posts

    3-வது முறையாக தேசிய விருது… இது இறைவனின் அருள்… ரசிகர்களுக்கே இந்த விருது சொந்தம் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

    July 18, 2026

    பாதுகாப்பான, நவீனமயமான சிவகாசியை உருவாக்குகிறோம் – அமைச்சர் கீர்த்தனா பெருமிதம்

    July 18, 2026

    சத்தியம் பேசும் சாத்தான்… இடர்பாடி… எடப்பாடியை துவம்சம் செய்யும் தவெக

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெண் கல்வியை ஊக்குவிக்க குழந்தை திருமணத்தை கைவிடுங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்.  

    2026 FIFA இறுதிப்போட்டி: அர்ஜென்டினா – ஸ்பெயின் பலப்பரீட்சை; மெஸ்ஸிக்கு மேலும் ஒரு வரலாற்று வாய்ப்பு

    3-வது முறையாக தேசிய விருது… இது இறைவனின் அருள்… ரசிகர்களுக்கே இந்த விருது சொந்தம் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

    பாதுகாப்பான, நவீனமயமான சிவகாசியை உருவாக்குகிறோம் – அமைச்சர் கீர்த்தனா பெருமிதம்

    சத்தியம் பேசும் சாத்தான்… இடர்பாடி… எடப்பாடியை துவம்சம் செய்யும் தவெக

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.