சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பேருந்தில் பயணித்த 20 பேர் பத்திரமாக மீட்கபப்ட்டனர்.
சென்னை அடையாரில் இருந்து தாம்பரம் நோக்கி தடம் எண் 99 பேருந்து சென்று கொண்டிருந்தது.
சோழிங்கநல்லூர் செம்மொழி சாலையில் தரைப்பாலம் மேலே பேருந்து சென்றபோது எதிரே லாரி வந்துள்ளது. இதனால் ஓட்டுநர் பேருந்தை சாலை ஓரமாக ஓட்டியபோது, எதிர்பாராத விதமாக அரசு பேருந்து அருகில் இருந்த சதுப்பு நிலப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 20 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
அரசு பேருந்து 20 பயணிகளுடன் சதுப்பு நிலத்தில் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
