Close Menu
    What's Hot

    பிரதமர் இல்லம் முன்பு தடுத்து நிறுத்தம் –  ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தர்ணா

    15 நாளில் 2 முறை எகிறிய அரிசி விலை..!! பொதுமக்கள் அதிர்ச்சி.. வறட்சி பாதிப்பு தீவிரம்!

    அரசு மதுபான கடைகள் தனியார் மயம்… திட்டம்  விவாதத்தில் உள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தகவல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கட்டுக்கடங்காத போராட்டம்..!! இழுத்து மூடப்பட்டது ஜனாதிபதி மாளிகை நுழைவு வாயில்..!!
    Featured

    கட்டுக்கடங்காத போராட்டம்..!! இழுத்து மூடப்பட்டது ஜனாதிபதி மாளிகை நுழைவு வாயில்..!!

    editor5By editor5July 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 35 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் நடைபெற்ற கேள்வித்தாள் கசிவு மற்றும் பெரும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் எனக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

    மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த உள்ளதாக அக்கட்சி முன்னதாக அறிவித்திருந்தது. இதனால் டெல்லி போலீஸார் உஷார் நிலையில் இருந்தனர். பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு ஐந்து மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன. புதுடெல்லி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு (Section 144) அமல்படுத்தப்பட்டது. முன் அனுமதி பெற்ற ஜந்தர் மந்தர் தவிர பிற இடங்களில் போராட்டங்கள், பேரணிகள் மற்றும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி காவல்துறை முன்னதாகவே இந்தப் பேரணிக்கு அனுமதி மறுத்திருந்தது. தடை உத்தரவுகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்திருந்தது. இருப்பினும், போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் எவ்வாறோ தடையைத் தாண்டி நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேற முயன்றனர். அவர்களைத் தடுக்கும் வகையில் பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தினர். நாடாளுமன்ற வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

    போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைய முயன்றபோது, துணை ராணுவப்படையினர் (CRPF) துப்பாக்கிகளுடன் முன்னேறிய காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை நோக்கி செல்ல வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானதால், ஜனாதிபதி மாளிகையின் வாயிற்கதவுகள் அடைக்கப்பட்டன. நாடாளுமன்ற நுழைவு வாயில்கள் சிறிது நேரம் மூடப்பட்டு பின்னர் திறக்கப்பட்டன.

    இந்தச் சம்பவம் டெல்லியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகளும் கடும் விமர்சனம் செய்து வரும் நிலையில், இன்றைய போராட்டம் மத்திய அரசுக்கு அழுத்தத்தை அதிகரித்துள்ளது. போராட்டக்காரர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    Cockroach Janata Party delhi protest
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“எகத்தாள திமுக விளைவுகளை அறுவடை செய்யும்!” – தவெக எச்சரிக்கை
    Next Article விளாத்திகுளம் எம்எல்ஏ கைது சர்ச்சை..!! ஆவேசமாகப் பதிலடி கொடுத்த அப்பாவு..!!
    editor5

    Related Posts

    பிரதமர் இல்லம் முன்பு தடுத்து நிறுத்தம் –  ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தர்ணா

    July 21, 2026

    15 நாளில் 2 முறை எகிறிய அரிசி விலை..!! பொதுமக்கள் அதிர்ச்சி.. வறட்சி பாதிப்பு தீவிரம்!

    July 21, 2026

    அரசு மதுபான கடைகள் தனியார் மயம்… திட்டம்  விவாதத்தில் உள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தகவல்

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரதமர் இல்லம் முன்பு தடுத்து நிறுத்தம் –  ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தர்ணா

    15 நாளில் 2 முறை எகிறிய அரிசி விலை..!! பொதுமக்கள் அதிர்ச்சி.. வறட்சி பாதிப்பு தீவிரம்!

    அரசு மதுபான கடைகள் தனியார் மயம்… திட்டம்  விவாதத்தில் உள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தகவல்

    சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்றலாம்..!! டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழகத்தில் 27-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.