Close Menu
    What's Hot

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    “மாணவர்களின் கோபத்தை ‘தீய சக்திகள்’ பயன்படுத்த விடக்கூடாது” – ப்ரீத்தி ஜிந்தா

    ‘ஆகாயம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..! 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»டெல்லி போராட்டம்: ‘சிவில்’ உடையில் தடியடி நடத்தியதால் சர்ச்சை… புதிய உத்தரவு!
    Featured

    டெல்லி போராட்டம்: ‘சிவில்’ உடையில் தடியடி நடத்தியதால் சர்ச்சை… புதிய உத்தரவு!

    Editor web2By Editor web2July 22, 2026Updated:July 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Delhi police 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லியில், காக்ரோச் ஜனதா கட்சியினர் (CJP) முன்னெடுத்த ‘சலோ சன்சத்’ போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை மற்றும் போலீஸ் நடவடிக்கையைத் தொடர்ந்து, டெல்லி போலீஸ் முக்கிய நிர்வாக உத்தரவை பிறப்பித்துள்ளது.

    ஜந்தர் மந்தர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அனைத்து போலீஸ் அதிகாரிகளும் இனிமேல் கட்டாயம் அதிகாரப்பூர்வ சீருடையில் மட்டுமே பணியில் ஈடுபட வேண்டும்; ’சிவில்’ ( சாதாரண) உடையில் பணியில் ஈடுபடக் கூடாது என்று டெல்லி போலீஸ் தலைமையகம் அனைத்து பிரிவுகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் போது, சீருடை அணியாத சிலர் போலீஸ் லத்திகளுடன் போராட்டக்காரர்களை தாக்கியதாக சமூக வலைதளங்களில் பல வீடியோக்கள் வைரலானது. மேலும், சில சீருடை போலீசார் கூட தங்களது பெயர் அடையாள அட்டைகளை அகற்றியிருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து போலீசாரின் நடவடிக்கை கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

    Delhi police Lathi charge

    இந்த விவகாரம் குறித்து காக்ரோச் ஜனதா கட்சி சமூக வலைதளங்களில், “சீருடை இல்லாமல் லத்தியுடன் தாக்கியவர்கள் யார்? எங்களை அடிக்க யாரை பணியமர்த்தினீர்கள்?” என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. எனினும், சீருடை அணியாத நபர்கள் போலீஸ் நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பாக டெல்லி போலீஸ் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை.

    இதற்கிடையில், உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி காவல்துறை அளித்துள்ள அறிக்கையில், ஜந்தர் மந்தர், சன்சத் மார்க், ரயில் பவன் சுற்றுவட்டாரம் மற்றும் கன்னாட் பிளேஸ் உள்ளிட்ட நான்கு இடங்களில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை உடைத்து முன்னேறியதால், நிலைமையை கட்டுப்படுத்த “லேசான பலப்பிரயோகம்” மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

    சட்ட நிபுணர்களின் கருத்துப்படி, பொதுமக்கள் கூட்டத்தை கலைக்க உத்தரவிடும் அதிகாரம் அடையாளம் தெரியும் போலீஸ் அதிகாரிகளுக்கே உள்ளது. சீருடை அல்லது அடையாளம் இல்லாத நபர்கள் சட்ட அமலாக்க நடவடிக்கையில் ஈடுபடுவது சட்ட ரீதியாக கேள்விகளை எழுப்பும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, ஜந்தர் மந்தர் பாதுகாப்பு பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நடவடிக்கையாக, அனைத்து போலீசாரும் சீருடையில் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    BNSSLaw2026 DelhiPolice JantarMantarProtest PoliceLathicharge
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்லி; போராட்டத் தளத்தில் ஒரு தூய்மை இயக்கம் –  குப்பைகளை அள்ளிய ‘Maid In India’ நிறுவனம்
    Next Article வினாத்தாள் கசிவு போராட்டத்தில் பங்கேற்றவரா தர்மேந்திர பிரதான்? மீண்டும் வைரலாகும் பழைய தகவல்
    Editor web2
    • Website

    Related Posts

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    July 22, 2026

    “மாணவர்களின் கோபத்தை ‘தீய சக்திகள்’ பயன்படுத்த விடக்கூடாது” – ப்ரீத்தி ஜிந்தா

    July 22, 2026

    ‘ஆகாயம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..! 

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    “மாணவர்களின் கோபத்தை ‘தீய சக்திகள்’ பயன்படுத்த விடக்கூடாது” – ப்ரீத்தி ஜிந்தா

    ‘ஆகாயம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..! 

    ‘கள்’ இறக்க அனுமதி அளிக்கப்படுமா?  – அமைச்சர் விக்னேஷ் சொல்வது என்ன?

    “கல்வி முறை சீரழிந்துவிட்டது; மாணவர்களின் 3 கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும்” – ராகுல் காந்தி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.