Close Menu
    What's Hot

    ‘கள்’ இறக்க அனுமதி அளிக்கப்படுமா?  – அமைச்சர் விக்னேஷ் சொல்வது என்ன?

    “கல்வி முறை சீரழிந்துவிட்டது; மாணவர்களின் 3 கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும்” – ராகுல் காந்தி

    வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்கு என்ன? ஐசரி கணேசனின் சகோதரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»டெல்லி; போராட்டத் தளத்தில் ஒரு தூய்மை இயக்கம் –  குப்பைகளை அள்ளிய ‘Maid In India’ நிறுவனம்
    Featured

    டெல்லி; போராட்டத் தளத்தில் ஒரு தூய்மை இயக்கம் –  குப்பைகளை அள்ளிய ‘Maid In India’ நிறுவனம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    022 maid in india
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் நடைபெற்ற பொதுப் போராட்டம் நிறைவடைந்த பிறகு, போராட்டத் தளத்தை சுத்தப்படுத்தும் சிறப்பு தூய்மை இயக்கத்தை Maid In India நிறுவனம் மேற்கொண்டது.

    மஞ்சள் நிற டி-ஷர்ட்கள் அணிந்து, கையுறைகள், முகக்கவசங்கள், துடைப்பங்கள் மற்றும் குப்பைப் பைகளை எடுத்துக்கொண்டு வந்த நிறுவன ஊழியர்கள், சாலைகள், நடைபாதைகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கிடந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள், ஒருமுறை பயன்படுத்தப்படும் பொருட்கள் உள்ளிட்ட குப்பைகளை சேகரித்தனர்.

    சில மணி நேரங்களிலேயே ஏராளமான பெரிய குப்பைப் பைகளை நிரப்பும் அளவுக்கு கழிவுகள் அகற்றப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு அங்கு இருந்த பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

    Maid In India நிறுவனத்தின் இணை நிறுவனர் சன்ஸ்கர் மாலிக் கூறுகையில், “தூய்மை என்பது ஒருவரின் பொறுப்பு அல்ல; அனைவரின் பொறுப்பு. கொண்டாட்டமோ, பொதுக் கூட்டமோ, எந்த நிகழ்வாக இருந்தாலும் நமது வீடுகளைப் போலவே பொதுஇடங்களையும் மதிக்க வேண்டும். இந்த முயற்சியின் மூலம் நாட்டிற்கு சிறிய பங்களிப்பை வழங்க விரும்பினோம்” என்றார்.

    மற்றொரு இணை நிறுவனர் சமய் மாலிக், “வீட்டு சேவைகளை வழங்கும் நிறுவனமாக மட்டுமல்லாமல், சமூகத்திற்கும் பங்களிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். வாடிக்கையாளர்கள், சமூகங்கள் மற்றும் பொதுஇடங்கள் என எங்கு வாய்ப்பு கிடைத்தாலும் நேர்மறையான மாற்றத்தை உருவாக்க விரும்புகிறோம். இந்த தூய்மை இயக்கம் அதற்கான ஒரு சிறிய முயற்சியாகும்” என்று தெரிவித்தார்.

    தொழில்நுட்பத்தின் மூலம் வீட்டு வேலை செய்பவர்களை பயிற்சி அளித்து, சான்றளிக்கப்பட்ட சேவைகளை வழங்கும் Maid In India நிறுவனம், சமூகப் பொறுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொறுப்பான குடிமை உணர்வை ஊக்குவிக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

    Civic Initiative Cleanliness Drive Delhi Protest Maid In India Social Responsibility
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநீட் வினாத்தாள் கசிவால் மாணவர்களின் நம்பிக்கை பாதிப்பு; மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – அண்ணாமலை
    Next Article டெல்லி போராட்டம்: ‘சிவில்’ உடையில் தடியடி நடத்தியதால் சர்ச்சை… புதிய உத்தரவு!
    Editor TN Talks

    Related Posts

    “கல்வி முறை சீரழிந்துவிட்டது; மாணவர்களின் 3 கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும்” – ராகுல் காந்தி

    July 22, 2026

    வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்கு என்ன? ஐசரி கணேசனின் சகோதரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்..!

    July 22, 2026

    தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடையாது…  கர்நாடகா திட்டவட்டம் – என்ன செய்யப் போகிறது விஜய் அரசு?

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘கள்’ இறக்க அனுமதி அளிக்கப்படுமா?  – அமைச்சர் விக்னேஷ் சொல்வது என்ன?

    “கல்வி முறை சீரழிந்துவிட்டது; மாணவர்களின் 3 கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும்” – ராகுல் காந்தி

    வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்கு என்ன? ஐசரி கணேசனின் சகோதரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்..!

    தேர்தல் வழக்கில் ரகுபதிக்கு தொடரும் சிக்கல்… பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!

    தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடையாது…  கர்நாடகா திட்டவட்டம் – என்ன செய்யப் போகிறது விஜய் அரசு?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.