Close Menu
    What's Hot

    ‘கள்’ இறக்க அனுமதி அளிக்கப்படுமா?  – அமைச்சர் விக்னேஷ் சொல்வது என்ன?

    “கல்வி முறை சீரழிந்துவிட்டது; மாணவர்களின் 3 கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும்” – ராகுல் காந்தி

    வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்கு என்ன? ஐசரி கணேசனின் சகோதரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நீட் வினாத்தாள் கசிவால் மாணவர்களின் நம்பிக்கை பாதிப்பு; மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – அண்ணாமலை
    Featured

    நீட் வினாத்தாள் கசிவால் மாணவர்களின் நம்பிக்கை பாதிப்பு; மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – அண்ணாமலை

    Editor TN TalksBy Editor TN TalksJuly 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    021 annamalai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் (NEET) தேர்வு மாணவர் சேர்க்கையில் ஒரே மாதிரியான முறையை கொண்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து நடந்த வினாத்தாள் கசிவு சம்பவங்கள் மாணவர்களின் நம்பிக்கையை கடுமையாக பாதித்துள்ளதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் மத்திய அரசு உடனடியாக அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வீ த லீடர்ச் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

    “பல ஆண்டுகளாக நான் தனிப்பட்ட முறையில் நீட் தேர்வை ஆதரித்து வந்தேன். நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஒரே மாதிரியான நடைமுறையை உருவாக்கியதோடு, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும் மருத்துவக் கல்வி கனவை நனவாக்கும் வாய்ப்பை நீட் வழங்கியது என்று நம்பினேன்.

    ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் நீட் இளநிலை (UG) தேர்வின் வினாத்தாள் மூன்று முறை கசிந்துள்ளது. இதனால் மாணவர்கள் மீண்டும் மீண்டும் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது. மாணவர்களுக்கு இது மிகுந்த மனஅழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே மாதிரியான தேர்வு முறையை உறுதி செய்ய வேண்டிய அமைப்பே தோல்வியடைந்த நிலையில், அதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. இதுவே மாணவர்கள் தெருக்களில் இறங்கி தங்களது வேதனையை வெளிப்படுத்த காரணமாக அமைந்தது என நான் உறுதியாக நம்புகிறேன்.

    ஜனநாயகத்தில் போராட்டம் என்பது அடிப்படை உரிமை. ஆனால் பாஜக தலைமையிலான மத்திய அரசு போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இவ்வளவு தாமதம் செய்தது ஏன்? போராட்டம் தீவிரமடைந்த பிறகே ஏன் உரையாடல் தொடங்கப்பட்டது? இத்தனை நாள் எதற்காக காத்திருந்தீர்கள்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும், “மாணவர்களுக்கும், அவர்களை வழிநடத்துபவர்களுக்கும் பொறுப்பு உள்ளது. ஒரு போராட்டம் நீண்ட நாட்கள் நீடிக்கும்போது, சுயநல நோக்கமுடைய சிலர் அதில் நுழைந்து தங்களது அரசியல் அல்லது பிற நோக்கங்களை முன்னிறுத்த முயற்சிப்பது இயல்பு. அவர்கள் போராட்டத்தின் உண்மையான கோரிக்கைகளை திசைதிருப்ப அனுமதிக்கக் கூடாது. போராட்டத்தின் அடிப்படை நோக்கத்தில் இருந்து விலகாமல் மாணவர்கள் செயல்பட வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

    இறுதியாக, “பாஜக தலைமையிலான மத்திய அரசு மாணவர்களுடன் வெளிப்படையான மற்றும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளுக்கு விரைவாக உரிய தீர்வுகளை வழங்க வேண்டும். எந்த நாட்டின் வலிமையும் அதன் இளைஞர்கள் அந்த நாட்டின் நிறுவனங்களின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில்தான் உள்ளது. கல்வி அமைப்பின் நியாயத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை மீது மாணவர்கள் நம்பிக்கையை இழந்தால், அது நாட்டின் எதிர்காலத்தையே ஆபத்தில் ஆழ்த்தும்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    Annamalai Central Government Education News NEET paper leak Students
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகிழிந்த சட்டை, மூக்கில் ரத்தம்… டெல்லியை உலுக்கிய ராகுல் காந்தியின் போராட்டம்: காங்கிரஸ் கணக்கு பலித்ததா?
    Next Article டெல்லி; போராட்டத் தளத்தில் ஒரு தூய்மை இயக்கம் –  குப்பைகளை அள்ளிய ‘Maid In India’ நிறுவனம்
    Editor TN Talks

    Related Posts

    ‘கள்’ இறக்க அனுமதி அளிக்கப்படுமா?  – அமைச்சர் விக்னேஷ் சொல்வது என்ன?

    July 22, 2026

    “கல்வி முறை சீரழிந்துவிட்டது; மாணவர்களின் 3 கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும்” – ராகுல் காந்தி

    July 22, 2026

    வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்கு என்ன? ஐசரி கணேசனின் சகோதரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்..!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘கள்’ இறக்க அனுமதி அளிக்கப்படுமா?  – அமைச்சர் விக்னேஷ் சொல்வது என்ன?

    “கல்வி முறை சீரழிந்துவிட்டது; மாணவர்களின் 3 கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும்” – ராகுல் காந்தி

    வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்கு என்ன? ஐசரி கணேசனின் சகோதரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்..!

    தேர்தல் வழக்கில் ரகுபதிக்கு தொடரும் சிக்கல்… பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!

    தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடையாது…  கர்நாடகா திட்டவட்டம் – என்ன செய்யப் போகிறது விஜய் அரசு?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.