Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வினாத்தாள் கசிவு போராட்டத்தில் பங்கேற்றவரா தர்மேந்திர பிரதான்? மீண்டும் வைரலாகும் பழைய தகவல்
    Featured

    வினாத்தாள் கசிவு போராட்டத்தில் பங்கேற்றவரா தர்மேந்திர பிரதான்? மீண்டும் வைரலாகும் பழைய தகவல்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    023 dharmendra prathan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், 1997-ஆம் ஆண்டு ஒடிசாவில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக அவர் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பழைய தகவல் சமூக வலைதளங்களில் மீண்டும் பரவி வருகிறது.

    1997-ஆம் ஆண்டு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தேசியச் செயலாளராக இருந்த தர்மேந்திர பிரதான், ஒடிசாவில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக சுமார் 1,500 மாணவர்களை வழிநடத்தி தலைமைச் செயலகம் முன்பு  போராட்டம் நடத்தியதாகவும், அந்தப் போராட்டத்தின் போது காவல்துறை தடியடி நடத்தியதில் அவர் பலத்த காயமடைந்து எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், இருந்தபோதிலும் தனது போராட்டத்தை தொடர்ந்தார் எனவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன..

    உத்கல் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற காலத்திலேயே தர்மேந்திர பிரதான் மாணவர் அரசியலில் தீவிரமாக செயல்பட்டதாகவும், 1994 முதல் 1997 வரை இரண்டு முறை ABVP-யின் தேசியச் செயலாளராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்தப் பழைய தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்படும் நிலையில், மாணவர் தலைவராக இருந்தபோது வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய அவரது செயல்பாட்டை ஒரு தரப்பு பாராட்டி வருகிறது.

    ஆனால் மற்றொரு தரப்பு, தற்போது மத்திய கல்வி அமைச்சராக இருக்கும் அவர், தொடர்ச்சியாக நடைபெறும் வினாத்தாள் கசிவு சம்பவங்களைத் தடுக்க ஏன் முடியவில்லை என்று கேள்வி எழுப்பி வருகிறது.

     

    2021 முதல் மத்திய கல்வி அமைச்சராக உள்ள தர்மேந்திர பிரதான், நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் ஏற்பட்ட வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் காரணமாக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்களில், 2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    Dharmendra Pradhan Fact Check Indian Politic NEET paper leak Viral News
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்லி போராட்டம்: ‘சிவில்’ உடையில் தடியடி நடத்தியதால் சர்ச்சை… புதிய உத்தரவு!
    Next Article காஞ்சிபுரம் : உணவகத்தில் சாப்பிட்டவர்களுக்கு உடல் உபாதை..! ஊழியர்களுடன் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம்..!
    Editor TN Talks

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.