Close Menu
    What's Hot

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    “மாணவர்களின் கோபத்தை ‘தீய சக்திகள்’ பயன்படுத்த விடக்கூடாது” – ப்ரீத்தி ஜிந்தா

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்கு என்ன? ஐசரி கணேசனின் சகோதரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்..!
    Featured

    வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்கு என்ன? ஐசரி கணேசனின் சகோதரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்..!

    Editor web4By Editor web4July 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    10 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்குகளை தணிக்கை செய்ய உத்தரவிடக் கோரி ஐசரி கணேசனின் சகோதரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    சென்னை வேல்ஸ் அறக்கட்டளை நிர்வாகத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க ஐசரி கணேஷ் உள்ளிட்ட அறங்காவலர்களுக்கு தடை கோரி அவரின் சகோதரியும், வேல்ஸ் அறக்கட்டளையின் ஆயுள் கால அறங்காவலருமான அழகு தமிழ் செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், பிரபல மறைந்த நடிகர் ஐசரி வேலனின் நினைவாக கடந்த 1992-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை வேல்ஸ் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகத்தில் ஐசரி கணேசன் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் அறங்காவலர்களாக இருந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு தனக்கும் சில அறங்காவலர்களுக்கும் தெரியாமல் வேல்ஸ் அறக்கட்டளையின் அறங்காவலர்களை குறைக்கும் வகையில் விதிகளில் மாற்ற செய்ததாகவும், சில அறங்காவலர்களின் ராஜினாமா கடிதங்கள் போலியாக தயாரிக்கப்பட்டு, பிற அறங்காவலர்கள் நிர்வாகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அறக்கட்டளையின் சொத்துக்கள் தொடர்ந்து அடமானம் வைக்கப்பட்டு, அதன் நிதி பிற நிறுவனங்களுக்குத் திருப்பி விடப்பட்டதால், ஒப்புதலின்றி நடைபெற்ற இந்த நிதிப் பரிவர்த்தனைகளால் அறக்கட்டளையின் கல்வி நோக்கமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    வேல்ஸ் அறக்கட்டளையில் ஏகமனதான ஒப்புதல் இன்றி செய்யப்பட்ட இந்தத் திருத்தங்கள் செல்லாது என்றும் வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்கு விவரங்களை தணிக்கை  செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும் வேல்ஸ் அறக்கட்டளையின் அறங்காவலர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட அறங்காவலர்கள் முக்கிய முடிவுகள் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும், அறக்கட்டளையை நிர்வகிக்க இடைகால நிர்வாகி ஒருவரை நீதிமன்றமே நியமிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேர்தல் வழக்கில் ரகுபதிக்கு தொடரும் சிக்கல்… பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
    Next Article “கல்வி முறை சீரழிந்துவிட்டது; மாணவர்களின் 3 கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும்” – ராகுல் காந்தி
    Editor web4

    Related Posts

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    July 22, 2026

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    July 22, 2026

    “மாணவர்களின் கோபத்தை ‘தீய சக்திகள்’ பயன்படுத்த விடக்கூடாது” – ப்ரீத்தி ஜிந்தா

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    “மாணவர்களின் கோபத்தை ‘தீய சக்திகள்’ பயன்படுத்த விடக்கூடாது” – ப்ரீத்தி ஜிந்தா

    ‘ஆகாயம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..! 

    ‘கள்’ இறக்க அனுமதி அளிக்கப்படுமா?  – அமைச்சர் விக்னேஷ் சொல்வது என்ன?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.