Close Menu
    What's Hot

    முன்னாள் நட்சத்திரங்கள் ஒன்று கூடும் ஆசியன் லெஜெண்ட்ஸ் லீக்… யூசுப் பதான், அம்பாட்டி ராயுடு உற்சாகம்!

    “காவல் மரணம்… திரைப்படம் பார்த்து கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்களின் பதில் என்ன?: உதயநிதி

    உங்க காதலனிடம் சொல்லுங்க… இத்தாலி பிரதமர் மெலோனியின் இன்ஸ்டா பதிவில் CJP ஆதரவாளர்களின் கமெண்ட்!. புதிய சர்ச்சை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அடுத்த லாக்-அப் மரணம்?. போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் உயிரிழப்பு!. உறவினர்கள் போராட்டம்!
    Featured

    அடுத்த லாக்-அப் மரணம்?. போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் உயிரிழப்பு!. உறவினர்கள் போராட்டம்!

    Editor web3By Editor web3July 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tuticorin custodial death
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூத்துக்குடியில் மது விற்பனை தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவமும், இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த நாகராஜனின் மகன் அருணாச்சலம் (26). இவர் மூன்றாவது மைல் பகுதியில் உள்ள ஒரு அரசு மதுபானக் கடை பாரில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி இரவு பார் மூடப்பட்ட பிறகு, சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்றதாகக் கூறி தென்பாகம் காவல்துறையினர் அருணாச்சலத்தைக் கைது செய்ததுடன், அவரிடமிருந்து 120 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

    இந்தநிலையில், கடந்த 17-ஆம் தேதி மாலையே அருணாச்சலத்தின் உடல் மற்றும் தலை, கால்களில் பலத்த காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து அவரது தாய் பரமேஸ்வரியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அருணாச்சலம் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    காவல்துறையினர் விசாரிப்பதற்காக அழைத்துச் சென்றபோது கடுமையாகத் தாக்கியதால்தான் தனது மகனின் தலையிலும் கால்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்று அவரது தாயும், உறவினர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். அருணாச்சலத்தைக் கொடூரமாகத் தாக்கிய அந்த நான்கு காவலர்கள் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உயிரிழந்த வாலிபரின் உறவினர்களிடம் தூத்துக்குடி டவுன் டி.எஸ்.பி சுனில் மற்றும் காவல்துறையினர் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.  சமீபத்தில் கன்னியாகுமரியில் நிகழ்ந்த சபரிவர்மன் லாக்கப் மரண சர்ச்சை அடங்குவதற்கு தமிழ்நாட்டில் மற்றொரு லாக்கப் மரணம் நிகழ்த்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Custodial death police questioning tuticorin Young man dies
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்லியில் தீவிரமடையும் போராட்டம்..!! 2வது நாளாக 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்!
    Next Article மாணவர்கள் நலனில் சமரசமா? வாய்ப்பே இல்ல..!! நயினார் நாகேந்திரன் உறுதி..!!
    Editor web3
    • Website

    Related Posts

    முன்னாள் நட்சத்திரங்கள் ஒன்று கூடும் ஆசியன் லெஜெண்ட்ஸ் லீக்… யூசுப் பதான், அம்பாட்டி ராயுடு உற்சாகம்!

    July 23, 2026

    “காவல் மரணம்… திரைப்படம் பார்த்து கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்களின் பதில் என்ன?: உதயநிதி

    July 23, 2026

    உங்க காதலனிடம் சொல்லுங்க… இத்தாலி பிரதமர் மெலோனியின் இன்ஸ்டா பதிவில் CJP ஆதரவாளர்களின் கமெண்ட்!. புதிய சர்ச்சை!

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முன்னாள் நட்சத்திரங்கள் ஒன்று கூடும் ஆசியன் லெஜெண்ட்ஸ் லீக்… யூசுப் பதான், அம்பாட்டி ராயுடு உற்சாகம்!

    “காவல் மரணம்… திரைப்படம் பார்த்து கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்களின் பதில் என்ன?: உதயநிதி

    உங்க காதலனிடம் சொல்லுங்க… இத்தாலி பிரதமர் மெலோனியின் இன்ஸ்டா பதிவில் CJP ஆதரவாளர்களின் கமெண்ட்!. புதிய சர்ச்சை!

    தேர்வுத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான தடியடி குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும – பிரியங்கா காந்தி ஆவேசம்!

    காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிண்டன் ஏன் இடம்பெறவில்லை?.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.