Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு..! கடலூரில் 29-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்..! இபிஎஸ் அறிவிப்பு..!
    Featured

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு..! கடலூரில் 29-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்..! இபிஎஸ் அறிவிப்பு..!

    Editor web4By Editor web4July 23, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8 11
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    “ கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை கடற்கரையில் சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில், 4 புதிய கடல்சார் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுப்பதற்காக இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் நிறுவனம், தமிழ் நாடு அரசு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அம்மாவின் நல்லாசியோடு நடைபெற்ற எனது தலைமையிலான கழக ஆட்சியில், கடலூர் மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால் தற்போது, கடலில் இக்கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. இதற்கு அனுமதி அளிக்கும்பட்சத்தில், இக்கிணறுகளை அமைப்பதற்கு அதிகப்படியான துளையிடுதலாலும், அதன்மூலம் ஏற்படும் அதிக சத்தத்தாலும், நச்சு ரசாயனக் கழிவுகளாலும் கடல் வாழ் உயிரினங்கள் அழியவும், இனப் பெருக்கம் குறையவும், சுற்றுச் சூழல் பாதிப்பும் ஏற்படுவதோடு, கடலையே நம்பி வாழும் மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிக்கப்படும். மேலும், கடற்கரை ஓரம் உள்ள சதுப்பு நிலத்தின் தன்மையும், அங்கே வளரும் மாங்ரோவ் இன காடுகளும் அழியும் அபாய நிலையும் உருவாகும். இவைகளின் காரணமாக, மக்களின் பொருளாதார நிலை வெகுவாக சீர்கெட்டுவிடும்.

    இந்நிலையில், மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை கடற்கரையில் இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் நிறுவனம், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுப்பதற்கு த.வெ.க. அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியும்; கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் சேரவைத்து, குதிரைபேர ஆட்சி நடத்தி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டத்தின் சார்பில், 29.7.2026 -புதன் கிழமை காலை 10 மணியளவில், பரங்கிப்பேட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார் தலைமையிலும், கழக அமைப்புச் செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான சொரத்தூர் ரா. ராஜேந்திரன், கடலூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தாமோதரன், கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கடலூர் கிழக்கு, கடலூர் வடக்கு, கடலூர் தெற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்”எனத் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎங்களைத் தடுத்தால் உலக எண்ணெய் சந்தையே முடங்கும்..!! ஈரான் வார்னிங்..!!
    Next Article ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிஐ, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
    Editor web4

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.