ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தேசியக் கொடி ஏற்ற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.
நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி, வீர தீர செயல்கள் புரிந்த காவல்துறையினருக்கு விருதுகள் வழங்கி உரையாற்ற உள்ளார்.
சுதந்திர தின விழாவுக்கான முன்னேற்பாடுகளை பொதுப்பணித்துறை தொடங்கியுள்ளது. இதற்காக கோட்டை கொத்தளத்திற்கு எதிரே முக்கிய விருந்தினர்கள் அமர்வதற்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்படுவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில் சுதந்திர தினத்தில் தேசியக் கொடியினை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஏற்ற உள்ளது இப்போதே தவெகவினரி குஷிப்படுத்தியுள்ளது.
