Close Menu
    What's Hot

    வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா!. 2024 சட்டத்திற்கும் புதிய 2026 மசோதாவிற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள்!. 

    காவு வாங்கும் கல்லட்டி மலை பாதை..!! இன்று முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தடையாம்..!!

     “டெல்லி போராட்டம்: நானாக இருந்தால் சுட்டுக்கொன்றிருப்பேன்..!” –ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதியின் சர்ச்சை பேச்சு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சகாயத்துக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு … தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
    Featured

    சகாயத்துக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு … தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 sagayam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக டிஜிபி க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தாக்கல் செய்த மனுவில், ”மதுரை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தபோது, கிரானைட் முறைகேட்டை விசாரிக்க தன்னை ஆணையராக உயர்நீதிமன்றம் நியமித்தது.

     உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் அரசுக்கு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தாகவும் தெரிவித்தார்.

    இந்த அறிக்கையின் அடிப்படையில், மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் எனக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு, 2023-ம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறியுள்ளார்

    பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதால், கிரானைட் முறைகேடு வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள தன்னால், நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

    அச்சுறுத்தல்கள் தொடர்வதால் பாதுகாப்பை தொடர்ந்து வழங்கக் கோரி கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து மீண்டும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சகாயம் தரப்பில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. எனவே மீண்டும் தனக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் தெரிவித்தார்.

    தமிழக அரசுத் தரப்பில், பாதுகாப்பு வழங்க கோரி மனுதாரர் அளித்த மனு, மறு ஆய்வுக் குழு பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கிராணைட் முறைகேடு தொடர்பான வழக்குகளில் சாட்சியம் அளிப்பதற்காக செல்லும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு, குறைந்தது ஒரு துப்பாக்கி ஏந்திய காவலருடன் கூடிய போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக டிஜிபி க்கு உத்தரவிட்டார்.

    மேலும், மனுதாரரின் கோரிக்கை மனுவை, பரிசீலித்து போலீஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க மறு ஆய்வு குழுவிற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

    Madras High Court Police Security Sagayam IAS Tamil Nadu DGP Tamil Nadu News
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகல்வியோடு விளையாட்டிலும் நம் இளைஞர்கள் சிறக்கட்டும்..!! வெள்ளி வென்ற தமிழக வீரருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
    Next Article காமன்வெல்த் போட்டியில் வெள்ளி… தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
    Editor TN Talks

    Related Posts

    வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா!. 2024 சட்டத்திற்கும் புதிய 2026 மசோதாவிற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள்!. 

    July 27, 2026

    காவு வாங்கும் கல்லட்டி மலை பாதை..!! இன்று முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தடையாம்..!!

    July 27, 2026

     “டெல்லி போராட்டம்: நானாக இருந்தால் சுட்டுக்கொன்றிருப்பேன்..!” –ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதியின் சர்ச்சை பேச்சு

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா!. 2024 சட்டத்திற்கும் புதிய 2026 மசோதாவிற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள்!. 

    காவு வாங்கும் கல்லட்டி மலை பாதை..!! இன்று முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தடையாம்..!!

     “டெல்லி போராட்டம்: நானாக இருந்தால் சுட்டுக்கொன்றிருப்பேன்..!” –ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதியின் சர்ச்சை பேச்சு

    இனி நடக்கப்போகும் சம்பவத்தை மட்டும் பாருங்க..!! மார்க்கண்டேயனை நேரில் சந்தித்த உதயநிதி பாய்ச்சல்..!!

    காவிரி உரிமையில் சமரசம் கூடாதாம்..!! கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்க்கு துரைமுருகன் ‘வார்னிங்’..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.