Close Menu
    What's Hot

    ஆய்வுக்காக ஸ்கூட்டியில் பறந்து வந்த அமைச்சர் ஆனந்த்..!! காரணம் இதுதான்..!!

    “போராடினாலே தடியடியா…?” – உச்ச நீதிமன்றம் காட்டம்

    நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்…  விஜய்யை கடுமையாகச் சாடிய கோகுல இந்திரா!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காமன்வெல்த் போட்டியில் வெள்ளி… தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
    Featured

    காமன்வெல்த் போட்டியில் வெள்ளி… தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    Editor TN TalksBy Editor TN TalksJuly 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    010 pm
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காமன் வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள தமிழ்நாட்டு வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 65 கிலோ எடைப் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த சாதனைக்கு தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் போட்டியில், பளுதூக்கும் போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி மொத்தம் 286 கிலோ எடையைத் தூக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

    இந்த வெற்றியை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பளுதூக்கலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆண்கள் 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் எனக் கூறியுள்ள பிரதமர் மோடி,

    அவரது இந்த சிறப்பான சாதனை ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்ச்சியடையச் செய்து, பெருமைப்பட வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். எதிர்காலப் போட்டிகளிலும் அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

    Commonwealth Games Prime Minister Narendra Modi Raja Muthupandi Silver Medal Tamil Nadu Athlete
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசகாயத்துக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு … தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
    Next Article உதவி பேராசிரியர் நியமனம்.. தடை கோரிய பொதுநல வழக்கு வாபஸ்! சென்னை ஐகோர்ட் தள்ளுபடி!
    Editor TN Talks

    Related Posts

    ஆய்வுக்காக ஸ்கூட்டியில் பறந்து வந்த அமைச்சர் ஆனந்த்..!! காரணம் இதுதான்..!!

    July 27, 2026

    “போராடினாலே தடியடியா…?” – உச்ச நீதிமன்றம் காட்டம்

    July 27, 2026

    நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்…  விஜய்யை கடுமையாகச் சாடிய கோகுல இந்திரா!

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆய்வுக்காக ஸ்கூட்டியில் பறந்து வந்த அமைச்சர் ஆனந்த்..!! காரணம் இதுதான்..!!

    “போராடினாலே தடியடியா…?” – உச்ச நீதிமன்றம் காட்டம்

    நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்…  விஜய்யை கடுமையாகச் சாடிய கோகுல இந்திரா!

    முதலமைச்சர் தனிப்பிரிவு முன் அவசர பாதுகாப்பு ஏற்பாடு..!! தீயணைப்பு வீரர்கள் நியமனம்!

    வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா!. 2024 சட்டத்திற்கும் புதிய 2026 மசோதாவிற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள்!. 

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.