Close Menu
    What's Hot

    காவிரி உரிமையில் சமரசம் கூடாதாம்..!! கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்க்கு துரைமுருகன் ‘வார்னிங்’..!!

    ரூ.28 கோடி ஊழல் வழக்கு.. Ex. அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு செக் வைத்த சென்னை ஐகோர்ட்..!!

    திமுக டீம் ரெடி.. ஒன்றிணையும் பழைய அதிகாரிகள்.. உளவுத்துறையின் ரகசிய ஆபரேஷன்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»உதவி பேராசிரியர் நியமனம்.. தடை கோரிய பொதுநல வழக்கு வாபஸ்! சென்னை ஐகோர்ட் தள்ளுபடி!
    Featured

    உதவி பேராசிரியர் நியமனம்.. தடை கோரிய பொதுநல வழக்கு வாபஸ்! சென்னை ஐகோர்ட் தள்ளுபடி!

    editor5By editor5July 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 20 13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை திரும்பப் பெற அனுமதித்து, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    இந்தப் பணியிடங்களுக்கான நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 2025 அக்டோபரில் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற எழுத்துத் தேர்வில் சுமார் 42 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்வுக்குப் பிறகு விடைத்தாள்களின் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், மதிப்பெண் வழங்கும் நடைமுறையில் பல்வேறு குழப்பங்கள் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனைத் தொடர்ந்து, அண்ணாமலையின் “வீ த லீடர்ஸ்” இயக்கத்தைச் சேர்ந்த கரு நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், சுயாதீன கல்வி நிபுணர்கள் குழுவை அமைத்து விடைத்தாள் மதிப்பீட்டு முறையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை உதவி பேராசிரியர் நியமன நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரருக்கு நேரடி பாதிப்பு என்ன என்பதையும், பணிநியமன விவகாரத்தில் பொதுநல வழக்கு எந்த அடிப்படையில் விசாரிக்கப்பட வேண்டும் என்பதையும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்வு நடைமுறையை உரிய காலத்தில் சவால் செய்யாததால் தற்போது இடைக்கால உத்தரவு வழங்க இயலாது என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

    இதையடுத்து, மனுவை வாபஸ் பெற்று தேவையெனில் புதிதாக மனு தாக்கல் செய்ய அனுமதி கோரிய மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், மனுவை திரும்பப் பெற அனுமதி வழங்கி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    Chennai High Court Order
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாமன்வெல்த் போட்டியில் வெள்ளி… தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
    Next Article இணையத்தில் வெளியான ஜனநாயகன்… திருட்டுத் தனமாகப் பார்த்தவருக்கு நிபந்தனை முன் ஜாமீன்!
    editor5

    Related Posts

    காவிரி உரிமையில் சமரசம் கூடாதாம்..!! கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்க்கு துரைமுருகன் ‘வார்னிங்’..!!

    July 27, 2026

    ரூ.28 கோடி ஊழல் வழக்கு.. Ex. அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு செக் வைத்த சென்னை ஐகோர்ட்..!!

    July 27, 2026

    திமுக டீம் ரெடி.. ஒன்றிணையும் பழைய அதிகாரிகள்.. உளவுத்துறையின் ரகசிய ஆபரேஷன்!

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காவிரி உரிமையில் சமரசம் கூடாதாம்..!! கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்க்கு துரைமுருகன் ‘வார்னிங்’..!!

    ரூ.28 கோடி ஊழல் வழக்கு.. Ex. அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு செக் வைத்த சென்னை ஐகோர்ட்..!!

    திமுக டீம் ரெடி.. ஒன்றிணையும் பழைய அதிகாரிகள்.. உளவுத்துறையின் ரகசிய ஆபரேஷன்!

    மர்ம நபரால் தொடர் தொல்லை: காவல் ஆணையரிடம் சென்னை மேயர் பிரியா பரபரப்பு புகார்!

    நீலகிரியில் மர்ம பூச்சி..!! உலா வரும் ‘கருப்புப் படை’யால் வெளியே வர தயங்கும் மக்கள்..!! பின்னணி என்ன..??

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.