Close Menu
    What's Hot

    கரூர் நெரிசல்: ‘31 பேரின் அரசு வேலை ரத்து உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்’! பாதிக்கப்பட்டோர் கோரிக்கை!

    குமரி: கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை: லாரி உரிமையாளர்கள் மறியல்!

    நாமக்கல் கவிஞர் மாளிகைக்குச் செல்கிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கரூர் நெரிசல்: ‘31 பேரின் அரசு வேலை ரத்து உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்’! பாதிக்கப்பட்டோர் கோரிக்கை!
    Featured

    கரூர் நெரிசல்: ‘31 பேரின் அரசு வேலை ரத்து உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்’! பாதிக்கப்பட்டோர் கோரிக்கை!

    Editor web1By Editor web1July 27, 2026Updated:July 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 21
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு வழங்கிய  அரசுப் பணியை ரத்து செய்த உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டர் கோரிக்கை  வைத்துள்ளார்.

    கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி நடைபெற்ற தவெக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் தகுதியுள்ள 31 பேருக்கு, கடந்த ஜூலை 10-ம் தேதி கரூர் சென்ற முதலமைச்சர் விஜய் அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கியிருந்தார்.

    அரசு வேலை வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இன்று (ஜூலை 27) தீர்ப்பளித்தது. அதில், தற்காலிகப் பணி நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைச் சுட்டிக்காட்டி, 31 பேருக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணைகளையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

    5 24

    நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, கரூர் சம்பவத்தில் உயிரிழந்த ரவி கிருஷ்ணாவின் தாயார் ஞானாம்பாள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், எனது மகன் ரவி கிருஷ்ணாவை இழந்த துயரத்தில் இருந்த எங்களுக்கு, என் மகள் பிரியதர்ஷினிக்கு பரமத்தி யூனியன் அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக என் மகள் அப்பணியில் ஈடுபாட்டுடன் பணியாற்றி வந்தாள். தற்போது நீதிமன்றம் இந்த வேலையை ரத்து செய்திருப்பது எங்களை மீண்டும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வறுமை மற்றும் சூழலைக் கருத்தில் கொண்டு, உயர்நீதிமன்றம் கருணையோடு பரிசீலனை செய்து எங்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை வைத்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் இந்த விவகாரத்தில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுமரி: கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை: லாரி உரிமையாளர்கள் மறியல்!
    Editor web1
    • Website

    Related Posts

    குமரி: கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை: லாரி உரிமையாளர்கள் மறியல்!

    July 27, 2026

    நாமக்கல் கவிஞர் மாளிகைக்குச் செல்கிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

    July 27, 2026

    சிவகாசி: பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி- முதல்வர் விஜய்

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கரூர் நெரிசல்: ‘31 பேரின் அரசு வேலை ரத்து உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்’! பாதிக்கப்பட்டோர் கோரிக்கை!

    குமரி: கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை: லாரி உரிமையாளர்கள் மறியல்!

    நாமக்கல் கவிஞர் மாளிகைக்குச் செல்கிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

    சிவகாசி: பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி- முதல்வர் விஜய்

    தவெகவில் சேருகிறாரா குஷ்பு..? – தலைமைச் செயலகத்துக்கு திடீர் வருகையால் பரபரப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.