Close Menu
    What's Hot

    தூத்துக்குடி; தவெக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு… எஸ்.பி. அலுவலகத்தில் பெண் புகார்

    சாத்தான்குளம்; சிறுபான்மை நிறுவனங்களின் சொத்துகளை அபகரிக்க சூழ்ச்சி… மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்

    பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள்: 2 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»ஜப்பானில் 7.1 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!. சுனாமி எச்சரிக்கை; மக்கள் பீதி!
    உலகம்

    ஜப்பானில் 7.1 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!. சுனாமி எச்சரிக்கை; மக்கள் பீதி!

    Editor web3By Editor web3July 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    japan earthquake 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜப்பானின் தெற்கு கியூஷு பகுதியில் அமைந்துள்ள குமாமோட்டோ மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை இன்று 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலடிக்கு கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் ஒரு மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தையடுத்து, கியூஷு தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ, நாகசாகி, ககோஷிமா, ஃபுகுவோகா, சாகா, ஒய்டா மற்றும் மியாசாகி உள்ளிட்ட முக்கிய மாகாணங்களுக்கு அவசரகால நிலநடுக்க எச்சரிக்கைகள் மற்றும் சுனாமி எச்சரிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. டோக்கியோவிலிருந்து சுமார் 900 கி.மீ தென்மேற்கே உள்ள அரியாகே வளைகுடா பகுதி இதன் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளது. இருப்பினும், இந்தச் சுனாமி எச்சரிக்கையானது உள்ளூர் கடலோரப் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இதனால் பேரழிவுகள் எற்பட வாய்ப்பில்லை என்றும் அமெரிக்க பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

    தற்போதைய நிலவரப்படி உயிரிழப்புகளோ அல்லது பெரிய அளவிலான சேதங்களோ ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளதோடு, மீட்புக்குழுவினர் உள்கட்டமைப்புகளை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

    வரும் மணிநேரங்களில் நில அதிர்வுகள் தொடர வாய்ப்புள்ளதால், கடலோரப் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அதிகாரப்பூர்வ பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர். கடந்த 2016-ஆம் ஆண்டில் இதே குமாமோட்டோ பகுதியில் ஏற்பட்ட கோர நிலநடுக்கம் 50-க்கும் மேற்பட்டோரின் உயிரைக் குடித்தது குறிப்பிடத்தக்கது.

    earthquake emergency alerts Japan's southern Kyushu region powerful 7.1-magnitude tsunami warnings
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article’காவிரியில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா தண்ணீர் திறக்க வேண்டும்’
    Next Article நாமக்கல் கோயிலில் விடிய விடிய கறிவிருந்து… 225 ஆடுகள், 3000 கிலோ மட்டன் விருந்து!
    Editor web3
    • Website

    Related Posts

    தூத்துக்குடி; தவெக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு… எஸ்.பி. அலுவலகத்தில் பெண் புகார்

    July 29, 2026

    சாத்தான்குளம்; சிறுபான்மை நிறுவனங்களின் சொத்துகளை அபகரிக்க சூழ்ச்சி… மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்

    July 29, 2026

    பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள்: 2 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தூத்துக்குடி; தவெக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு… எஸ்.பி. அலுவலகத்தில் பெண் புகார்

    சாத்தான்குளம்; சிறுபான்மை நிறுவனங்களின் சொத்துகளை அபகரிக்க சூழ்ச்சி… மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்

    பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள்: 2 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

    ஓசூர்: கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் கலக்கும் ரசாயன கழிவு நீர்…. அமைச்சர் கீர்த்தனா  ஆய்வு!

    ட்ரோனில் கொண்டு செல்லப்பட்ட பச்சைத் தேயிலை… சோதனை முயற்சி வெற்றி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.