Close Menu
    What's Hot

    மக்களவையில் தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா நிறைவேற்றம்: வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை

    ரயிலில் பயணித்து போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பாதையை ஆய்வு செய்த முதல்வர் விஜய்!

    இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர்: புதுக்கோட்டையில் களைகட்டிய விவசாயிகள் மாநாடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பரபரப்புக்கு மத்தியில்.. மாணவர்களிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்ட ஆளுநர் அர்லேகர்! காரணம் என்ன..??
    Featured

    பரபரப்புக்கு மத்தியில்.. மாணவர்களிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்ட ஆளுநர் அர்லேகர்! காரணம் என்ன..??

    editor5By editor5July 28, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 37 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா வ.உ.சிதம்பரனார் கலையரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விழாவுக்கு தலைமை தாங்கினார். கொச்சியில் உள்ள கேரளா மீன்வளம் மற்றும் கடல் ஆய்வு பல்கலைக்கழகத்தின் நிறுவன துணைவேந்தர் மதுசூதன குரூப் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

    இந்த ஆண்டு மொத்தம் 37,877 மாணவ-மாணவிகள் பட்டம் பெற தகுதி பெற்றனர். இதில் 12,932 ஆண்களும், 24,945 பெண்களும் அடங்குவர். நேரடியாக ஆளுநரிடம் பட்டம் பெற 871 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இதில் 758 முனைவர் (Ph.D) பட்டதாரிகள் (163 ஆண்கள், 595 பெண்கள்) மற்றும் 113 தங்கப் பதக்கம் பெற்ற மாணவர்கள் (12 ஆண்கள், 101 பெண்கள்) இடம்பெற்றனர்.

    விழா தொடங்கியபோது, தங்கப் பதக்கம் பெற்ற 113 பேருக்கு மட்டும் ஆளுநர் நேரடியாகப் பதக்கம் வழங்குவார் என்ற அறிவிப்பு வெளியானது. மற்ற மாணவர்களுக்கு அதிகாரிகள் பட்டம் வழங்குவார்கள் எனக் கூறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக முனைவர் பட்டம் பெற்ற பெண் மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். “ஆறு ஆண்டுகளாக காத்திருந்தோம். சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் இருந்து வந்திருக்கிறோம். குடும்பத்தினரிடம் என்ன பதில் சொல்வது?” என்று கேள்வி எழுப்பினர். “எல்லோரும் ஒரே கட்டணம் செலுத்தியிருக்கிறோம். ஏன் பாகுபாடு?” என எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த சூழ்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகிகள் உடனடியாக ஆளுநரிடம் பேசினர். மாணவர்களின் உணர்வுகளை மனதில் கொண்டு, அனைவருக்கும் ஆளுநர் நேரடியாக பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதை மேடையில் அறிவித்ததும் மாணவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

    பின்னர் பேசிய ஆளுநர் அர்லேகர், “ஆளுநர் அலுவலகத்துக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் இடையே தகவல் தொடர்பில் ஏற்பட்ட குழப்பமே இந்த சர்ச்சைக்குக் காரணம். 871 பேர் என்று துணைவேந்தர் சொன்னதும், அனைவருக்கும் நானே பட்டம் வழங்க விரும்பினேன். உங்கள் ஆற்றலை நான் எப்படி உதாசீனப்படுத்த முடியும்? ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று உருக்கமாகத் தெரிவித்தார். இந்த நிகழ்வு மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பட்டமளிப்பு விழா சுமுகமாக முடிவடைந்தது.

    Governor Arlekar manonmaniam sundaranar university
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமெரிக்க முடிவில் தலையிட வேண்டாம்..!! எப்-35 விவகாரத்தில் நெதன்யாவுக்கு டிரம்ப் கண்டிப்பு..!!
    Next Article சி.எம். பற்றி பேசினால் வழக்கு… சீமான் குறித்து பேசினால் வழக்கில்லையா? யூ டியூப்பர் பிஸ்மி மீது வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
    editor5

    Related Posts

    மக்களவையில் தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா நிறைவேற்றம்: வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை

    July 29, 2026

    ரயிலில் பயணித்து போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பாதையை ஆய்வு செய்த முதல்வர் விஜய்!

    July 29, 2026

    இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர்: புதுக்கோட்டையில் களைகட்டிய விவசாயிகள் மாநாடு

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மக்களவையில் தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா நிறைவேற்றம்: வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை

    ரயிலில் பயணித்து போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பாதையை ஆய்வு செய்த முதல்வர் விஜய்!

    இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர்: புதுக்கோட்டையில் களைகட்டிய விவசாயிகள் மாநாடு

    விருது விழா: புதுச்சேரி வருகிறார் அமித்ஷா… ஏற்பாடுகள் தீவிரம்!

    காமன்வெல்த் போட்டி;  தங்கமே இலக்கு… அரையிறுதிக்கு முன்னேறிய சாக்‌ஷி சவுத்ரி உறுதி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.