Close Menu
    What's Hot

    “பிரகாஷ்ராஜ் அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாவார்” – பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

    மக்களவையில் தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா நிறைவேற்றம்: வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை

    ரயிலில் பயணித்து போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பாதையை ஆய்வு செய்த முதல்வர் விஜய்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுக்கு ‘அ. முத்துலிங்கம் இயல் விருது’: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
    தமிழ்நாடு

    ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுக்கு ‘அ. முத்துலிங்கம் இயல் விருது’: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    Editor web2By Editor web2July 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Maruthu stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கனடாவில் இயங்கி வரும் தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2025-ஆம் ஆண்டுக்கான ‘அ. முத்துலிங்கம் இயல் விருது’ ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், டிராட்ஸ்கி மருது நேர்த்தியான கோட்டோவியராக மட்டுமல்லாமல், அனிமேஷன் மற்றும் கணினி வரைகலை போன்ற நவீன கலைத் துறைகளிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருபவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அவரது திறமையைப் பயன்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு அவரை தமிழ்நாடு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக திராவிட மாடல் அரசில் நியமித்ததாகவும், 2023-ஆம் ஆண்டு தமிழக அரசின் செய்தித்துறை வெளியிட்ட இலக்கிய மலரிலும் அவரது பங்களிப்பு இடம்பெற்றதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

    மேலும், தமிழ் மன்னர்கள் உண்மையில் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் காட்சிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘வாளோர் ஆடும் அமலை’ போன்ற படைப்புகள் மூலம், தமிழர் வரலாற்றைப் பற்றிய தவறான புரிதல்களை மாற்றுவதிலும் டிராட்ஸ்கி மருது முக்கிய பங்காற்றியுள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.

    தமிழ் மரபையும் உலகின் நவீன கலை மற்றும் சிந்தனைப் போக்குகளையும் இணைக்கும் பாலமாக விளங்கி வரும் டிராட்ஸ்கி மருதுவின் வாழ்நாள் சாதனைகளுக்கான தகுந்த அங்கீகாரமாக இந்த ‘அ. முத்துலிங்கம் இயல் விருது’ அமைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

    IyalAward mkstalin TamilLiterature TrotskyMarudu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆக.1 முதல் தட்கல் டிக்கெட்டுக்கு டோக்கன் முறை.. பயணிகள் நெரிசலை குறைக்க ரயில்வே அதிரடி!
    Next Article டெல்லி போராட்டம்: மாணவர்கள் மீதான வழக்கில் மத்திய அரசு திட்டவட்டம்!
    Editor web2
    • Website

    Related Posts

    ரயிலில் பயணித்து போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பாதையை ஆய்வு செய்த முதல்வர் விஜய்!

    July 29, 2026

    இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர்: புதுக்கோட்டையில் களைகட்டிய விவசாயிகள் மாநாடு

    July 29, 2026

    விருது விழா: புதுச்சேரி வருகிறார் அமித்ஷா… ஏற்பாடுகள் தீவிரம்!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “பிரகாஷ்ராஜ் அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாவார்” – பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

    மக்களவையில் தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா நிறைவேற்றம்: வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை

    ரயிலில் பயணித்து போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பாதையை ஆய்வு செய்த முதல்வர் விஜய்!

    இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர்: புதுக்கோட்டையில் களைகட்டிய விவசாயிகள் மாநாடு

    விருது விழா: புதுச்சேரி வருகிறார் அமித்ஷா… ஏற்பாடுகள் தீவிரம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.