Close Menu
    What's Hot

    மேகதாது பிரச்னையில் திமுக அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது… மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

    தனுஷின் அரசியல் வருகை.. திமுக, அதிமுகவின் எதிர்காலம் குறித்து பரபரப்பு கணிப்பு!

    மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன்..!  சைக்கிள் வழங்கி நெகிழ்ச்சி..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பழநி : சூடுபிடிக்கும் ரூ.100கோடி நில மோசடி வழக்கு..! 4 பேரை கைது செய்து சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை..!
    Featured

    பழநி : சூடுபிடிக்கும் ரூ.100கோடி நில மோசடி வழக்கு..! 4 பேரை கைது செய்து சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை..!

    Editor web4By Editor web4July 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 32
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ரூ.100 கோடி மதிப்புள்ள மட நில மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசார் நடவடிக்கையை தீவிரப்படுத்தி 4 பேரை கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா, பப்பன்குளம் பகுதியைச் சேர்ந்த வெள்ளைத்துரை (60), திண்டுக்கல் மாவட்டம், பழனி கவுண்டன்குளம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அன்வர்தீன் (65), விழுப்புரம் மாவட்டம், சாலாமேடு பகுதியைச் சேர்ந்த முருகதாஸ் (56), மற்றும் பழனி அருகே டி.கே.என். புதூர் பகுதியைச் சேர்ந்த சேதுபதி ஆகியோர்.

    இவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் 318(4), 336(3), 340(2), 49 மற்றும் 61(2) ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கு, பழனி அடிவாரம் சாலையில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் தொடர்பான சர்ச்சையிலிருந்து உருவானது. சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள இந்த நிலம் கடந்த ஜூலை 6-ஆம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. விழுப்புரத்தைச் சேர்ந்த முருகதாஸ், வெள்ளைத்துரை மற்றும் சேதுபதி ஆகியோருக்கு நிலத்தை விற்பனை செய்ததாகவும், இதில் முறைகேடு நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    நிலப்பதிவு தொடர்பான தகவல் வெளியாகியதைத் தொடர்ந்து, கோவில் இணை ஆணையர் மாரிமுத்து பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில், பதிவுத்துறையின் மாவட்ட பதிவாளர் சசிகலா மற்றும் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் மாவட்ட பதிவாளர் சசிகலா, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்ட பலரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தினர்.

    விசாரணையின் தொடர்ச்சியாக தற்போது முருகதாஸ், வெள்ளைத்துரை, அன்வர்தீன் மற்றும் சேதுபதி ஆகிய 4 பேரை கைது செய்துள்ள சிபிசிஐடி போலீசார், நில மோசடியில் மேலும் தொடர்புடையவர்கள் உள்ளனரா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதென்மேற்கு பருவமழை எதிர்பார்ப்பை எட்டவில்லை.. தமிழகத்தில் 16% குறைவு!
    Next Article ஆடிப்பெருக்கு…உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ. 3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை…
    Editor web4

    Related Posts

    மேகதாது பிரச்னையில் திமுக அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது… மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

    July 29, 2026

    தனுஷின் அரசியல் வருகை.. திமுக, அதிமுகவின் எதிர்காலம் குறித்து பரபரப்பு கணிப்பு!

    July 29, 2026

    மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன்..!  சைக்கிள் வழங்கி நெகிழ்ச்சி..!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேகதாது பிரச்னையில் திமுக அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது… மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

    தனுஷின் அரசியல் வருகை.. திமுக, அதிமுகவின் எதிர்காலம் குறித்து பரபரப்பு கணிப்பு!

    மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன்..!  சைக்கிள் வழங்கி நெகிழ்ச்சி..!

    மதுக்கடைகள் தனியார் மயம்… அன்புமணி எதிர்ப்பு… மதுக்கடைகளை மூடுவது தான் முழுமையான தீர்வு!

    சென்னை : குறைவான உறுப்பினர்களுடன் கூடிய மாமன்றக் கூட்டம்..! திமுக அஞ்சாமல் மக்கள் பணிகள் தொடரும்..! மேயர் பிரியா உரை..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.