Close Menu
    What's Hot

    தவெகவுக்கு அதிமுக எம்.எல்.ஏக்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டவர் சி.வி.சண்முகம் – பசுபதி போடும் பகீர் குண்டு

    தூத்துக்குடி : முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்..! ஜாமின் மனு ஒத்திவைப்பு..!

    புதிய சாலைத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்… CUMTA முடிவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மதுக்கடைகள் தனியார் மயம்… அன்புமணி எதிர்ப்பு… மதுக்கடைகளை மூடுவது தான் முழுமையான தீர்வு!
    Featured

    மதுக்கடைகள் தனியார் மயம்… அன்புமணி எதிர்ப்பு… மதுக்கடைகளை மூடுவது தான் முழுமையான தீர்வு!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 anbumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரசு மதுக்கடைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது மதுப் புழக்கத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும். மதுக்கடைகளை மூடுவது தான் முழுமையான தீர்வு  என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்பக்கத்தில் கூறியிருப்பதாவது….

    தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 4048 மதுக்கடைகளில்  நகரப்பகுதிகளில் உள்ள சுமார் 2500 மதுக்கடைகளை மட்டும் தனியார் மயமாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால் தமிழக அரசின் முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

    தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு அரசின் இலக்காக இருக்க வேண்டும்.

    அரசே மது விற்பனை செய்கிறது என்பது மானக்கேடானது. இந்த இழுக்கை போக்குவதற்கான தீர்வு அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்துவதுதானே தவிர மதுக்கடைகளை தனியாரிடம் தாரை வார்ப்பது அல்ல.

    தமிழ்நாட்டில் தனியார் மதுக்கடைகள் செயல்பட்டு வந்ததை மாற்றி 2002-03 -ம் ஆண்டில் அரசு மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்த முடிவை மாற்றி மீண்டும் பழைய நடைமுறைக்கே செல்வது சீர்திருத்தம் அல்ல… மாறாக சீர்கேடாகத்தான் கருதப்படும்.

    தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்தே, தமிழ்நாட்டில் மதுக்கடைகளை தனியார் மயமாக்குவதற்கும், வெளி மாநிலங்களில் இருந்து மதுவை கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்கும் ஒரு லாபி தீவிரமாக முயன்று வருவதாக  செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.

    இருப்பினும் தமிழ்நாட்டின் ஒற்றை அதிகார மையம் நான்தான் என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் மீண்டும் மீண்டும் கூறி வந்ததால் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்று மதுவிலக்கு ஆதரவாளர்கள் நம்பினார்கள். ஆனால் இப்போது வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

    தனியார் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் மது வெள்ளமாக பாயும்.

    சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் இன்னும் அதிக அளவில் மதுவுக்கு அடிமையாவார்கள். அப்படியொரு நிலை ஏற்பட அரசே வழிவகுக்கக் கூடாது எனவே தமிழ்நாட்டில் மதுக்கடைகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

    Anbumani Ramadoss Liquor Policy PMK Tamil Nadu Politics Tasmac
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னை : குறைவான உறுப்பினர்களுடன் கூடிய மாமன்றக் கூட்டம்..! திமுக அஞ்சாமல் மக்கள் பணிகள் தொடரும்..! மேயர் பிரியா உரை..!
    Next Article மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன்..!  சைக்கிள் வழங்கி நெகிழ்ச்சி..!
    Editor TN Talks

    Related Posts

    தவெகவுக்கு அதிமுக எம்.எல்.ஏக்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டவர் சி.வி.சண்முகம் – பசுபதி போடும் பகீர் குண்டு

    July 29, 2026

    தூத்துக்குடி : முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்..! ஜாமின் மனு ஒத்திவைப்பு..!

    July 29, 2026

    புதிய சாலைத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்… CUMTA முடிவு!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெகவுக்கு அதிமுக எம்.எல்.ஏக்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டவர் சி.வி.சண்முகம் – பசுபதி போடும் பகீர் குண்டு

    தூத்துக்குடி : முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்..! ஜாமின் மனு ஒத்திவைப்பு..!

    புதிய சாலைத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்… CUMTA முடிவு!

    நிலப் பிரச்சனை தொடர்பாக குழந்தையுடன் பெண்கள் தர்ணா… தலைமைச் செயலகத்தில் பரபரப்பு!

    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் சிக்கன் பிரியாணி? அமைச்சர் ராஜ்மோகன் தகவல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.