Close Menu
    What's Hot

    காமராஜர் காலை உணவுத் திட்டம் தனியாரிடம் ஒப்படைப்பா..? – தமிழக அரசு விளக்கம்

    “முட்டாள்கள்!” – ராகுல் காந்தி பேச்சுக்கு எதிர்ப்பு… பாஜக எம்.பிக்கள் கடும் அமளி!

    9 நாட்களாக ஒதுக்கப்படாத இலாகா… புதுச்சேரியில் பாஜக-ரங்கசாமி இடையே விரிசலா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»புதிய சாலைத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்… CUMTA முடிவு!
    Featured

    புதிய சாலைத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்… CUMTA முடிவு!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 road
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதிய சாலைத்திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தலை AI உதவியுடன் விரைவுபடுத்த சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA)  ‘ கும்டா ‘ முடிவு செய்துள்ளது.

    சாலைத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை வேகமாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ளும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் Web GIS  தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் புதிய டிஜிட்டல் தளத்தை உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) டெண்டர் வெளியிட்டுள்ளது

    புதிய சாலை அமைக்க வேண்டுமென்றால், எந்தெந்த நிலங்கள் பாதிக்கப்படும், எவ்வளவு நிலம் கையகப்படுத்த வேண்டும், அதன் மதிப்பு என்ன என்பதைக் கண்டறிய அதிகாரிகள் தற்போது GIS உட்பட (( geographic information system – நில வரைபடத்துடன் , நில உரிமையாளர்கள் , நிலத்தின் தன்மை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும் ஆவணம் )) பல  வரைபடங்கள் மற்றும் ஆவணங்களை தனித்தனியாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

    இதற்கு தீர்வாக, அனைத்து நில விவரங்களையும் ஒரே டிஜிட்டல் வரைபடத்தில் காட்டும் Web GIS தளத்தையும், PDF மற்றும் AutoCAD (DWG) வரைபடங்களில் (( ஏற்கனவே)) உள்ள சாலைத் தகவல்களை செயற்கை நுண்ணறிவு மூலம் தானாக கண்டறிந்து, டிஜிட்டல் சாலைப் பதிவேடாக மாற்றும் அமைப்பையும் உருவாக்க CUMTA திட்டமிட்டுள்ளது.

    இந்த தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வந்தால், சாலைத் திட்டங்களுக்கான கையகப்படுத்த வேண்டிய நிலத்தின் தேவை, செலவு, பாதிக்கப்படும் பகுதிகள் உள்ளிட்ட விவரங்களை மிகக் குறுகிய நேரத்தில் கணக்கிட்டு, திட்டமிடலை விரைவுபடுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நிலம் கையகப்படுத்தும் செலவை முன்கூட்டியே துல்லியமாக கணிக்க , திட்ட தாமதத்தை குறைக்க ,பல துறைகளின் தரவுகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்க AI மூலம் PDF மற்றும் DWG வரைபடங்களில் உள்ள சாலைத் தகவல்களை தானாக டிஜிட்டல் தரவாக மாற்றி, திட்டமிடலை வேகப்படுத்த இத்திட்டம் உதவும் என  அதிகாரிகள் தரப்பில்  கூறப்பட்டுள்ளது.

    சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையமான CUMTA  சென்னை மாநகர எல்லை மட்டுமின்றி CMDA எல்லைக்கு உட்பட்ட திருவள்ளூர் , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , ராணிப்பேட்டை மாவட்டங்களின் பல பகுதிகளையும் உள்ளடக்கி சாலை உள்ளிட்ட கட்டமைப்புகளை மேம்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    artificial intelligence Chennai Development CUMTA Road Infrastructure Tamil Nadu News
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநிலப் பிரச்சனை தொடர்பாக குழந்தையுடன் பெண்கள் தர்ணா… தலைமைச் செயலகத்தில் பரபரப்பு!
    Next Article தூத்துக்குடி : முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்..! ஜாமின் மனு ஒத்திவைப்பு..!
    Editor TN Talks

    Related Posts

    காமராஜர் காலை உணவுத் திட்டம் தனியாரிடம் ஒப்படைப்பா..? – தமிழக அரசு விளக்கம்

    July 29, 2026

    “முட்டாள்கள்!” – ராகுல் காந்தி பேச்சுக்கு எதிர்ப்பு… பாஜக எம்.பிக்கள் கடும் அமளி!

    July 29, 2026

    9 நாட்களாக ஒதுக்கப்படாத இலாகா… புதுச்சேரியில் பாஜக-ரங்கசாமி இடையே விரிசலா?

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காமராஜர் காலை உணவுத் திட்டம் தனியாரிடம் ஒப்படைப்பா..? – தமிழக அரசு விளக்கம்

    “முட்டாள்கள்!” – ராகுல் காந்தி பேச்சுக்கு எதிர்ப்பு… பாஜக எம்.பிக்கள் கடும் அமளி!

    9 நாட்களாக ஒதுக்கப்படாத இலாகா… புதுச்சேரியில் பாஜக-ரங்கசாமி இடையே விரிசலா?

    செமி கண்டக்டர் உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி சீனா… சொந்த DUV லித்தோகிராபி இயந்திரங்கள் உற்பத்தி தொடக்கம்!

    தவெகவுக்கு அதிமுக எம்.எல்.ஏக்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டவர் சி.வி.சண்முகம் – பசுபதி போடும் பகீர் குண்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.