சென்னையில் நடைபெற்ற தோழர் நல்லகண்ணுவின் மார்பளவு சிலை திறப்பு விழா மற்றும் அம்மாச்சி – கற்பனையின் முதல் ஆசிரியர் நூல் வெளியீட்டு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் வீரபண்டியனும் கலந்து கொண்டார். ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் மரியாதை செய்து கொண்டனர்.
நிகழ்வில் சிபிஐ மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் பேசியதாவது…
நல்லகண்ணுக்கு ஒரு நிகழ்வு என்றால் அங்கு கம்யூனிஸ்ட் எப்படி இல்லாமல் இருக்கும். அரசியலில் எற்ற இறக்கம், நிலைப்பாடு மாறுபடலாம். திமுக- வை ஜனநாயக பேரியக்கமாக தான் பார்க்கிறோம். சமரசமற்ற போர்க்களத்தை ஆர்.எஸ்.எஸ் மீது செலுத்தி நாங்கள் வீழ்த்த துடிக்கிறோம்.
திமுகவிற்கும், கம்யூனிஸ்டுக்கும் நீண்ட கொள்கை உறவு உள்ளது. அண்ணா, பெரியார், கலைஞர், ஸ்டாலினை எப்படி கடந்து செல்ல முடியும்.
தந்தை பெரியாரையும், டாக்டர் கலைஞரையும் மறக்கவே முடியாது. கம்யூனிஸ்டு இயக்க வரலாறு இவர்கள் இருவரையும் எப்போதும் மறக்க மாட்டோம்.
உலகமே இடது சிந்தனையால் இயங்குகிறது. நாட்டை, தமிழ்நாட்டை, இந்திய மண்ணை நம் காலத்திலேயே இடதுசாரிகள் பக்கம் திருப்பும் மகத்தான பணியில் திமுக போன்ற ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பாடுபட கம்யூனிஸ்ட் இயக்கம் எப்போதும் தயாராக உள்ளது என்று பேசினார்.
