Close Menu
    What's Hot

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    ‘வந்தே மாதரம்’ மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம்: நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் ஒப்புதல்!

    “மேகதாது அணைக்கு எதிராக ராகுல் காந்தி பேசத் தயாரா?” – அன்புமணி சவால்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ரீல்ஸ் மோகத்தில் அமைச்சர் அருண்ராஜ்… அரசு மருத்துவமனைகளிலோ அவலங்கள்… நயினார் நாகேந்திரன் விமர்சனம்
    Featured

    ரீல்ஸ் மோகத்தில் அமைச்சர் அருண்ராஜ்… அரசு மருத்துவமனைகளிலோ அவலங்கள்… நயினார் நாகேந்திரன் விமர்சனம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    028 nainaar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் ரீல்ஸ் மோகத்தில் இருக்க, அரசு மருத்துவமனைகளில் அடுத்தடுத்து அவலங்கள் அரங்கேறுவதாக  பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

    மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்கப்படாததால் விபத்தில் காயமடைந்த பரமேஸ்வரன் என்பவர் உயிரிழந்து விட்டதாகவும்,

    கோபிச்செட்டிபாளையம் அருகே குழந்தைகள் நல மையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 10 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்து விட்டதாகவும்,

    தேனி பெரியபாளையம் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாக 14 வயது சிறுவன் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் வெளியாகியுள்ள செய்திகளை பார்க்கையில், தமிழகத்தின் சுகாதாரத்துறை எந்தளவிற்கு சீரழிந்து கிடக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகக் தெரிகிறது என எக்ஸ் தளத்தில் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.

    மேலும், பதவியேற்ற புதிதில், “அரசு அமைச்சர்கள் எல்லாம் அரசு மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெறுவோம்” என்று வசனம் பேசிய, சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், படத்திற்கு போவது போலவும், பைக்கில் செல்வது போலவும் விதவிதமாக ரீல்ஸ்கள் எடுப்பதில் தான் தற்போது அதீத ஆர்வம் காட்டுகிறாரே தவிர, அரசு மருத்துவமனைகளின் தர மேம்பாட்டிற்காக இதுவரை ஒரு செங்கல்லைக் கூட நகர்த்தவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

    மொத்தத்தில் “மாற்றம்” என்று கூறி, மக்களை “ஏமாற்றி” ஆட்சிக்கு வந்த தவெக அரசு, தற்போது நிர்வாகம் தெரியாமல் திணறுகிறது என்பது தான் உண்மை எனக் கூறியுள்ள நயினார் நாகேந்திரன்,

    ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் கூட, இன்னும் “Reels Mode” -லேயே உலவிக் கொண்டிருக்கும் முதல்வரும், அவரது அமைச்சர்களும், இனியாவது மக்களின் அடிப்படைத் தேவைகளையும், பிரச்சினைகளையும் கவனிக்க வேண்டும் எனவும்

    அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்து ஏழை, எளிய மக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

     இனியும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் எனவும் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    arunraj BJP Tamil Nadu Government hospitals Nainar Nagendran Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமேற்கு தொடர்ச்சி மலையில் பயங்கர காட்டுத்தீ! 200 ஏக்கர் பரப்பளவில் மூலிகை செடிகள் எரிந்து சேதம்!
    Next Article சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து பிரேசில் வீரர் நெய்மர் ஓய்வு!
    Editor TN Talks

    Related Posts

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    July 30, 2026

    ‘வந்தே மாதரம்’ மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம்: நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் ஒப்புதல்!

    July 30, 2026

    “மேகதாது அணைக்கு எதிராக ராகுல் காந்தி பேசத் தயாரா?” – அன்புமணி சவால்

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    ‘வந்தே மாதரம்’ மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம்: நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் ஒப்புதல்!

    “மேகதாது அணைக்கு எதிராக ராகுல் காந்தி பேசத் தயாரா?” – அன்புமணி சவால்

    3-வது இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து! மாநில பாடலின் முன்னுரிமையைப் பறிக்கும் முயற்சிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்!

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.