Close Menu
    What's Hot

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    ‘வந்தே மாதரம்’ மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம்: நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் ஒப்புதல்!

    “மேகதாது அணைக்கு எதிராக ராகுல் காந்தி பேசத் தயாரா?” – அன்புமணி சவால்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மேற்கு தொடர்ச்சி மலையில் பயங்கர காட்டுத்தீ! 200 ஏக்கர் பரப்பளவில் மூலிகை செடிகள் எரிந்து சேதம்!
    Featured

    மேற்கு தொடர்ச்சி மலையில் பயங்கர காட்டுத்தீ! 200 ஏக்கர் பரப்பளவில் மூலிகை செடிகள் எரிந்து சேதம்!

    Editor web3By Editor web3July 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    theni Terrible forest fire
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேனி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென பற்றி எரியும் காட்டுத்தீயால் பல நூறு ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ள சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    தேனி வீரப்ப அய்யனார் கோயிலுக்கு மேல்புறமுள்ள வனப்பகுதியில் நேற்று மாலையில் சிறிய அளவில் தொடங்கிய இந்தத் தீ, இரவு முழுவதும் மளமளவெனப் பரவி தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் அப்பகுதியில் தீ எரிந்து வருவதுடன், மலை உச்சிப் பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளிக்கிறது.

    மலைப் பகுதி மிகவும் உயரமானதாக இருப்பதாலும், அப்பகுதியில் பலத்த காற்று வீசி வருவதாலும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினருக்குக் கடும் சவால்களும் சிரமங்களும் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    இந்த விபத்தின் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையின் 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் இருந்த விலைமதிப்பற்ற மரங்கள், அரிய வகை மூலிகைச் செடிகள் மற்றும் தாவரங்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளன. மேலும், இப்பகுதியில் வசிக்கும் சிறுத்தைகள், காட்டெருமைகள், பறவைகள் மற்றும் பல்வேறு சிறிய விலங்கினங்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடமாறும் சூழலும், கடுமையான பாதிப்புக்குள்ளாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    சமூக விரோதிகள் சிலர் இதுபோன்று காடுகளில் தீ வைத்துவிட்டுச் செல்வதே இதுபோன்ற பேரழிவுகளுக்கு முக்கியக் காரணம் என்று குற்றஞ்சாட்டும் வன ஆர்வலர்கள், வனத்துறையினர் இதுபோன்ற செயல்களைத் தீவிரமாகக் கண்காணித்து மேற்குத் தொடர்ச்சி மலையின் வளங்களைப் பாதுகாக்க உரிய மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    200 acres fire forest fire herbaceous plants Western Ghats
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு!
    Next Article ரீல்ஸ் மோகத்தில் அமைச்சர் அருண்ராஜ்… அரசு மருத்துவமனைகளிலோ அவலங்கள்… நயினார் நாகேந்திரன் விமர்சனம்
    Editor web3
    • Website

    Related Posts

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    July 30, 2026

    ‘வந்தே மாதரம்’ மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம்: நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் ஒப்புதல்!

    July 30, 2026

    “மேகதாது அணைக்கு எதிராக ராகுல் காந்தி பேசத் தயாரா?” – அன்புமணி சவால்

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    ‘வந்தே மாதரம்’ மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம்: நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் ஒப்புதல்!

    “மேகதாது அணைக்கு எதிராக ராகுல் காந்தி பேசத் தயாரா?” – அன்புமணி சவால்

    3-வது இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து! மாநில பாடலின் முன்னுரிமையைப் பறிக்கும் முயற்சிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்!

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.