Close Menu
    What's Hot

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    ‘வந்தே மாதரம்’ மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம்: நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் ஒப்புதல்!

    “மேகதாது அணைக்கு எதிராக ராகுல் காந்தி பேசத் தயாரா?” – அன்புமணி சவால்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு!
    Featured

    தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு!

    Editor web2By Editor web2July 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Cauvery water
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்திற்கு சுமார் 4 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.

    டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54-வது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக, தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரைக்கு எதிராக கர்நாடக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், அந்த முறையீட்டை பரிசீலித்த ஆணையம், ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று உத்தரவு பிறப்பித்தது.

    கூட்டத்தில் கர்நாடக அரசு தரப்பில், காவிரிப் படுகை முழுவதும் போதிய மழைப்பொழிவு இல்லாததால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவாக இருப்பதாகவும், தற்போது தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத சூழல் நிலவுவதாகவும் வாதிடப்பட்டது.

    மேலும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பிலிகுண்டுலுவில் 30,748 கனஅடி நீர் வந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை 178 கனஅடி மட்டுமே வந்துள்ளதாகவும், காவிரிப் படுகை அணைகளில் தற்போது 36.69 டிஎம்சி நீர் மட்டுமே இருப்பதாகவும் கர்நாடகா தெரிவித்தது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் 99 டிஎம்சி நீர் இருந்ததாகவும் அது சுட்டிக்காட்டியது.

    இரு மாநிலங்களின் வாதங்களையும் பரிசீலித்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம், தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    CauveryWater CWMA karnataka tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகைதா… முன் ஜாமீனா..? செந்தில் பாலாஜி மனு  உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரண!
    Next Article மேற்கு தொடர்ச்சி மலையில் பயங்கர காட்டுத்தீ! 200 ஏக்கர் பரப்பளவில் மூலிகை செடிகள் எரிந்து சேதம்!
    Editor web2
    • Website

    Related Posts

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    July 30, 2026

    ‘வந்தே மாதரம்’ மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம்: நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் ஒப்புதல்!

    July 30, 2026

    “மேகதாது அணைக்கு எதிராக ராகுல் காந்தி பேசத் தயாரா?” – அன்புமணி சவால்

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    ‘வந்தே மாதரம்’ மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம்: நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் ஒப்புதல்!

    “மேகதாது அணைக்கு எதிராக ராகுல் காந்தி பேசத் தயாரா?” – அன்புமணி சவால்

    3-வது இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து! மாநில பாடலின் முன்னுரிமையைப் பறிக்கும் முயற்சிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்!

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.