Close Menu
    What's Hot

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    ‘வந்தே மாதரம்’ மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம்: நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் ஒப்புதல்!

    “மேகதாது அணைக்கு எதிராக ராகுல் காந்தி பேசத் தயாரா?” – அன்புமணி சவால்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சென்னை ஐஐடி இயக்குநருக்கு எதிரான விமர்சனம்: பிரியங்கா காந்திக்கு 215 கல்வியாளர்கள் எதிர்ப்பு!
    Featured

    சென்னை ஐஐடி இயக்குநருக்கு எதிரான விமர்சனம்: பிரியங்கா காந்திக்கு 215 கல்வியாளர்கள் எதிர்ப்பு!

    Editor web2By Editor web2July 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Priyanka Kamakoti
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாடாளுமன்றத்தில் ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடியை விமர்சித்து பிரியங்கா காந்தி குறிப்பிட்டதாக கூறப்படும் கருத்துக்கு எதிராக, 215-க்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள், முன்னாள் துணைவேந்தர்கள் உள்ளிட்ட கல்வியாளர்கள் கடிதம் வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்தக் கருத்து ஒரு தனிநபரை மட்டுமல்ல, இந்தியாவின் அறிவியல் மற்றும் கல்வி நிறுவனங்களின் கண்ணியத்தையே பாதிக்கும் வகையில் இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    மத்திய அரசின் தேர்வுச் சீர்திருத்த பணிக்குழு தொடர்பாக மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, அக்குழுவில் இடம்பெற்றுள்ள ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடியை “கோமூத்திர நிபுணர்” என்று குறிப்பிட்டது  இந்தியாவின் அறிவியல் நிறுவனங்களின் கண்ணியத்தை பாதிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்தக் கருத்து ஒரு தனிநபர் மீதான விமர்சனத்தைத் தாண்டி, கல்வியாளர்கள் நடத்தப்படும் விதம் மற்றும் இந்தியாவின் கல்வி நிறுவனங்களின் கண்ணியம் குறித்த விரிவான கவலைகளை எழுப்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    பேராசிரியர் வி. காமகோடி ஐஐடி மெட்ராஸில் கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் எம்.எஸ்., முனைவர் பட்டம் பெற்றவர் என்றும், 150-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், 50-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி திட்டங்கள், இந்தியாவின் முதல் தொழில்துறை தர மைக்ரோபிராசஸர் உருவாக்கத்தில் முக்கிய பங்கு உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்தவர் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது கருத்துகளை ஆதாரங்களின் அடிப்படையில் விவாதிப்பதற்குப் பதிலாக இழிவுபடுத்தும் வகையில் விமர்சிப்பது அரசியலமைப்பு வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மைக்கு எதிரானது என்றும் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், அறிவியல் மனப்பான்மை என்பது புதிய கருத்துகளை கேலி செய்வதல்ல; ஆதாரங்களின் அடிப்படையில் அவற்றை ஆய்வு செய்வதே உண்மையான அணுகுமுறை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதுபோன்ற கருத்துகள் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் பொதுவெளியில் தங்களது கருத்துகளை பகிர்வதைத் தயக்கப்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.

    ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடு அவசியமானது; ஆனால் கேலியும் இழிவுபடுத்தலும் அறிவார்ந்த விவாதத்திற்கு மாற்றாக இருக்க முடியாது என்றும் கல்வியாளர்கள் அதில் மேலும் தெரிவித்துள்ளனர்.

    AcademicFreedom IITMadras PriyankaGandhi VKamakoti
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபோராட்டங்களுக்கு வெளிநாட்டு நிதி வருகிறதா? மத்திய அரசுக்கு அபிஜித் திப்கே சவால்!
    Next Article என் வாழ்நாள் முழுவதும் மகனின் நலனுக்காக துணை நிற்பேன்!. மாதம்பட்டி ரங்கராஜ் நெகிழ்ச்சி!
    Editor web2
    • Website

    Related Posts

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    July 30, 2026

    ‘வந்தே மாதரம்’ மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம்: நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் ஒப்புதல்!

    July 30, 2026

    “மேகதாது அணைக்கு எதிராக ராகுல் காந்தி பேசத் தயாரா?” – அன்புமணி சவால்

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    ‘வந்தே மாதரம்’ மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம்: நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் ஒப்புதல்!

    “மேகதாது அணைக்கு எதிராக ராகுல் காந்தி பேசத் தயாரா?” – அன்புமணி சவால்

    3-வது இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து! மாநில பாடலின் முன்னுரிமையைப் பறிக்கும் முயற்சிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்!

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.