Close Menu
    What's Hot

    காவிரி உரிமையை காக்க அனைத்துக் கட்சிக் கூட்டம்: முதல்வருக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

    ‘மின் கட்டண உயர்வு இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்’ – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

    நில அளவீட்டின்போது மோதல்!. பெண்ணை தாக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்!. மேட்டூரில் அதிர்ச்சி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»பிரதமர் மோடி குறித்த மார்பிங் ரீல்ஸ் விவகாரம்!. மெட்டா இந்தியா தலைவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு!.
    இந்தியா

    பிரதமர் மோடி குறித்த மார்பிங் ரீல்ஸ் விவகாரம்!. மெட்டா இந்தியா தலைவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு!.

    Editor web3By Editor web3July 31, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    PM Modi meta
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக சித்தரிக்கும் வகையிலும், மார்பிங் செய்யப்பட்ட படங்கள் மற்றும் தவறான ரீல்ஸ் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது தொடர்பாக, இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களின் தாய் நிறுவனமான ‘மெட்டா’ இந்தியாவின் தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட கணக்குகளை இயக்கியவர்கள் மீது ஐதராபாத் சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், நம்பல்லியைச் சேர்ந்த சமூக வலைதளப் பிரிவு உறுப்பினர் டி. சாம்கிரண் கவுட் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 29 அன்று சமூக வலைதளங்களை உலாவிக்கொண்டிருந்தபோது, பிரதமர் மோடிக்கு எதிரான மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அவதூறு கருத்துக்கள் அடங்கிய பல இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் பேஸ்புக் பதிவுகளை தான் கண்டதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வகையான அவதூறு உள்ளடக்கங்கள் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வன்முறையைத் தூண்டுவோர் மற்றும் பாரதிய நியாய சகிதா (BNS), தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) மற்றும் பிற சட்ட விதிகளின் கீழ் தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கோரப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய தவறான பதிவுகள் தனது தளங்களில் தொடர்ந்து இருக்க அனுமதித்ததற்காக மெட்டா நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதையடுத்து, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி சட்டம் பிரிவு 66(C) மற்றும் 67, மற்றும் பாரதிய நியாய சகிதா (BNS) பிரிவுகள் 353(2), 336(4)-ன் கீழ் சைபர் கிரைம் காவல் துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

    முன்னதாக, நீட் விவகாரம் தொடர்பான பிரதமர் மோடியின் காணொளியை பேஸ்புக் நிறுவனம் தற்காலிகமாக முடக்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மெட்டா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்குச் சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே அந்த வீடியோ தற்காலிகமாக நீக்கப்பட்டு பின்னர் மீட்டெடுக்கப்பட்டதாக மெட்டா நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    FIR Hyderabad Police Register Meta India Head Morphed Reels pm modi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleITR தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!. இந்த முக்கிய தவறுகளை செய்யாதீர்கள்!
    Next Article இந்தியாவில் புதிய சாதனை படைத்த “ஸ்பைடர் மேன்”!. முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
    Editor web3
    • Website

    Related Posts

    காவிரி உரிமையை காக்க அனைத்துக் கட்சிக் கூட்டம்: முதல்வருக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

    July 31, 2026

    ‘மின் கட்டண உயர்வு இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்’ – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

    July 31, 2026

    நில அளவீட்டின்போது மோதல்!. பெண்ணை தாக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்!. மேட்டூரில் அதிர்ச்சி!

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காவிரி உரிமையை காக்க அனைத்துக் கட்சிக் கூட்டம்: முதல்வருக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

    ‘மின் கட்டண உயர்வு இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்’ – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

    நில அளவீட்டின்போது மோதல்!. பெண்ணை தாக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்!. மேட்டூரில் அதிர்ச்சி!

    மாற்றப்படுகிறதா தாயுமானவர் திட்டம் பெயர்..?? அடுத்த அதிரடியில் இறங்கும் தவெக அரசு..!!

    முதல்வர் விஜய் கர்நாடகா பயணம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.