Close Menu
    What's Hot

    காவி நிறத்திற்கு மாறும் இந்திய ஹாக்கி சீருடை… “விளையாட்டுத் துறையிலும் அரசியலா..?”

    விஜய்யின் வெள்ளிக்கிழமை ரகசியம்.. பட்டு வேஷ்டி, சட்டைக்கு பின்னால் இருக்கும் சென்டிமென்ட்!

    பாக்.-ல் நிலக்கரி சுரங்க வெடி விபத்து.. எகிறும் பலி எண்ணிக்கை! மீட்புப்பணி தீவிரம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மனைவியை விவாகரத்து செய்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!. உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
    Featured

    மனைவியை விவாகரத்து செய்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!. உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

    Editor web3By Editor web3July 31, 2026Updated:July 31, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    JK CM Omar Abdullah divorce
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் விவாகரத்து வழக்கை  உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. இருவரும் பரஸ்பரமாக பிரிந்து செல்வதாக கூறியதை அடுத்து விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் அவரது மனைவி  பாயல் அப்துல்லா இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அரதே அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில்,’நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அரதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு உமர் அப்துல்லா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில், இரு தரப்பினரும் ஒரு சமரசத்திற்கு வந்துவிட்டதாகவும், பரஸ்பர சம்மதத்தின் பேரில் தங்களது திருமணத்தை ரத்து செய்யக் கோரி அரசியலமைப்பின் 142-வது பிரிவின் கீழ் கடந்த ஜூலை 22 அன்று மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

    “அவர்கள் இருவரும் சுதந்திரத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். எல்லாம் முடிவாகிவிட்டது. சட்டப்பிரிவு 142-ன் கீழ் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாண்புமிகு நீதிபதிகளே, தாங்கள் விவாகரத்து வழங்கலாம்” என்று சிபல் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். மேலும், மற்ற அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

    இதனைக் கவனத்தில் கொண்ட நீதிபதிகள் அமர்வு, “இது நல்ல விஷயம். இதற்கேற்ப தீர்வு கண்டு, இந்தத் தகவலை எங்கள் உத்தரவின் ஒரு பகுதியாக ஆக்கி வழக்கை முடித்துவைப்போம்” என்று தெரிவித்தது.

    முன்னதாக, தனக்கு விவாகரத்து வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து உமர் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். மனைவிக்கு எதிரான கொடுமை அல்லது கைவிடுதல் குற்றச்சாட்டுகளை அவர் நிரூபிக்கத் தவறிவிட்டார் என்று கூறி, அவரது விவாகரத்து மனுவைத் தள்ளுபடி செய்த 2016 ஆம் ஆண்டு குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை, டெல்லி உயர் நீதிமன்றம் 2023 டிசம்பர் 12 அன்று உறுதி செய்திருந்தது.

    குடும்ப நீதிமன்றத்தில் உமர் அப்துல்லா வாதிடுகையில், தங்களது திருமணம் மீள முடியாதபடி முறிந்துவிட்டதாகவும், 2007-ஆம் ஆண்டு முதல் தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் 2009-ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். 1994 செப்டம்பர் 1-ல் திருமணம் செய்துகொண்ட தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக நீண்ட காலமாகப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில்,  டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உமர் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற மத்தியஸ்த மையத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், தற்போது இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிவதாக தெரிவித்ததையடுத்து அவர்களுக்கு உச்ச நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.

    'Embraced Freedom' J&K CM Omar Abdullah Mutual Consent supreme court Wife Seek Divorce
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமெரிக்க வேலை வாய்ப்புக்கு ரூ.1 கோடி கட்டணமா? ட்ரம்ப் நிர்வாகம் தீவிர ஆலோசனை..!!
    Next Article பாக்.-ல் நிலக்கரி சுரங்க வெடி விபத்து.. எகிறும் பலி எண்ணிக்கை! மீட்புப்பணி தீவிரம்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    காவி நிறத்திற்கு மாறும் இந்திய ஹாக்கி சீருடை… “விளையாட்டுத் துறையிலும் அரசியலா..?”

    July 31, 2026

    விஜய்யின் வெள்ளிக்கிழமை ரகசியம்.. பட்டு வேஷ்டி, சட்டைக்கு பின்னால் இருக்கும் சென்டிமென்ட்!

    July 31, 2026

    பாக்.-ல் நிலக்கரி சுரங்க வெடி விபத்து.. எகிறும் பலி எண்ணிக்கை! மீட்புப்பணி தீவிரம்..!!

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காவி நிறத்திற்கு மாறும் இந்திய ஹாக்கி சீருடை… “விளையாட்டுத் துறையிலும் அரசியலா..?”

    விஜய்யின் வெள்ளிக்கிழமை ரகசியம்.. பட்டு வேஷ்டி, சட்டைக்கு பின்னால் இருக்கும் சென்டிமென்ட்!

    பாக்.-ல் நிலக்கரி சுரங்க வெடி விபத்து.. எகிறும் பலி எண்ணிக்கை! மீட்புப்பணி தீவிரம்..!!

    மனைவியை விவாகரத்து செய்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!. உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

    அமெரிக்க வேலை வாய்ப்புக்கு ரூ.1 கோடி கட்டணமா? ட்ரம்ப் நிர்வாகம் தீவிர ஆலோசனை..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.