Close Menu
    What's Hot

    த்ரிஷா இந்த நாட்டின் பிரதமரா அல்லது முதலமைச்சரா?. உதயநிதி கைதுக்கு ஆர்.எஸ். பாரதி கடும் கண்டனம்!

    த்ரிஷா குறித்து உதயநிதி பேச்சு… “பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும்” – குஷ்பு கண்டனம்

    உதயநிதி ஸ்டாலின் கைது ஆணவ அடக்குமுறை… பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பந்து பாசிச கைது – திமுக கண்டனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»கேரள மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்க… முதல்வர் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சியால் சர்ச்சை!
    இந்தியா

    கேரள மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்க… முதல்வர் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சியால் சர்ச்சை!

    Editor web3By Editor web3August 3, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kerala cm
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கேரளாவில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மாநிலம் முழுவதும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தொடர் மழையால் வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

    கேரளாவில் பெய்த கனமழைக்கு இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்;  ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்; மேலும் பலரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இடிந்து விழுந்த வீடுகள் மற்றும் நிலச்சரிவு காரணமாக தவிக்கும் பொதுமக்களை மீட்கும் பணிகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    மாநிலம் முழுவதும் 27 வீடுகள் முழுமையாகவும், 196 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புக்காக 5,792 பேர் மீட்கப்பட்டு, மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 209 நிவாரண முகாம்களில் பத்திரமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மழை சற்று குறைந்தாலும், மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் வி.டி. சதீஷன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், வெள்ளம் மற்றும் நீர் தேங்கிய பகுதிகளில் துப்புரவுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் வருவாய்த்துறை அமைச்சர் ஏ.பி. அணில்குமார் தெரிவித்துள்ளார்.

    கனமழையின் காரணமாக சனிக்கிழமையன்று மாநிலத்தின் பல பகுதிகளில் 320 மி.மீ வரை மழை பதிவாகியுள்ளது. இதனால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் கடுமையான நீர் தேக்கம் ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

    பத்தனம்திட்டா  பகுதிகளில் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த தேசிய பேரிடர் மீட்பப் படை (NDRF) கூடுதல் குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, திருவனந்தபுரம், பாலக்காடு, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் சிறப்புத் தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்திய வானிலை ஆய்வு மையம் மாநிலத்தின் 12 மாவட்டங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று ‘ஆரஞ்சு அலெட்’ எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் மூலம் அப்பகுதிகளில் 115 மி.மீ முதல் 204 மி.மீ வரை மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

    பேரிடர் அபாயம் உள்ள பகுதிகளில் மருத்துவத்துறையினர் முழு எச்சரிக்கையுடன் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகச் சுகாதாரத்துறை அமைச்சர் கே. முரளிதரன் உறுதியளித்துள்ளார்.

    மக்களின் உயிரைக் காப்பாற்ற அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதேவேளையில், பொன்னானியில் நடைபெற்ற ஒரு விருந்து நிகழ்ச்சியில் முதல்வர் வி.டி. சதீஷன் பங்கேற்றது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நேரத்தில் முதல்வர் விருந்து சாப்பிடுவது சரியா என சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றன.

    Chief Minister flood Heavy Rain kerala cm satheesan kerala flood keralam cm keralam heavy rain
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஈரான் மீது புதிய தாக்குதல் ஏன் நடைபெறவில்லை? காரணத்தை விளக்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!!
    Next Article தண்ணீரின்றி ஆடிப்பெருக்கு விழா.. காவிரி நீராடலுக்கு வந்த மக்களுக்காக புதிய ஷவர் வசதி!!
    Editor web3
    • Website

    Related Posts

    த்ரிஷா இந்த நாட்டின் பிரதமரா அல்லது முதலமைச்சரா?. உதயநிதி கைதுக்கு ஆர்.எஸ். பாரதி கடும் கண்டனம்!

    August 4, 2026

    த்ரிஷா குறித்து உதயநிதி பேச்சு… “பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும்” – குஷ்பு கண்டனம்

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது ஆணவ அடக்குமுறை… பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பந்து பாசிச கைது – திமுக கண்டனம்!

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    த்ரிஷா இந்த நாட்டின் பிரதமரா அல்லது முதலமைச்சரா?. உதயநிதி கைதுக்கு ஆர்.எஸ். பாரதி கடும் கண்டனம்!

    த்ரிஷா குறித்து உதயநிதி பேச்சு… “பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும்” – குஷ்பு கண்டனம்

    உதயநிதி ஸ்டாலின் கைது ஆணவ அடக்குமுறை… பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பந்து பாசிச கைது – திமுக கண்டனம்!

    உதயநிதி ஸ்டாலின் பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை!. அன்புமணி ராமதாஸ்!

    உதயநிதி கைதால் கொந்தளிக்கும் தமிழகம்..!! போராடிய ஓபிஎஸ் அதிரடி அரெஸ்ட்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.