Close Menu
    What's Hot

    உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதே…. தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி

    மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறப்பு – இறப்பு பதிவு (திருத்த) மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

    “உதயநிதி பேசிய வக்கிரமான கருத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்கிறாரா?”: அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»உதயநிதி கைது… தவெக அரசின் ஜனநாயகப் படுகொலை… கே.என்.நேரு கண்டனம்!
    Featured

    உதயநிதி கைது… தவெக அரசின் ஜனநாயகப் படுகொலை… கே.என்.நேரு கண்டனம்!

    Editor TN TalksBy Editor TN TalksAugust 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    012 kn nehru
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை, காவல்துறையை ஏவி கைது செய்த ஆளும் தவெக அரசின் ஜனநாயக படுகொலையை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வன்மையாகக் கண்டித்துள்ளார்.

    தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் டெல்டா விவசாயிகளை கண்ணீர் சிந்த வைத்து, மேகதாது அணை கட்டுவதை தடுக்க திராணியற்று, தமிழ்நாட்டிற்கு தீங்கு இழைப்போரை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாத முதலமைச்சரை, விவசாய சங்கங்களுடன் இணைந்து கண்டித்த நம் எதிர்க்கட்சித் தலைவரை, தனிப்பட்ட முறையில் பழிவாங்குவதற்காக கைது நடவடிக்கையை  ஆளும் தவெக அரசு மேற்கொண்டுள்ளதாக கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

    அத்துடன், நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், தற்போதைய முதலமைச்சர் மற்றும் ஆளும் தவெக அரசின் கையாலாகாத தனம் குறித்து கேள்வி எழுப்பக்கூடும் என்பதை நினைத்து, அச்சத்தின் மிகுதியால் உள்ள அரசின் உச்சபட்ச கோழைத்தனம் இது என விமர்சித்துள்ளார்.

    ஆட்சி அமைந்தது முதல் இன்று வரை மக்கள் நலனுக்காகவும், மாநிலத்தின் நலனுக்காகவும் எந்த நடவடிக்கையும் எடுக்காத முதலமைச்சரின்  ஆணவம் மிகுந்த அதிகார மமதைக்கு நம் தமிழ்நாட்டு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் எனச் சாடியுள்ள கே.என்.நேரு,

    நிர்வாக திறன் ஏதுமின்றி  பாசிசத்தை கையில் எடுத்துள்ள ரீல்ஸ் அரசான தவெக அரசின் இந்த நடவடிக்கையால் நம் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களையும், நம் கழகத்தையும் ஒருபோதும் அச்சுறுத்த முடியாது எனக் கூறியுள்ளார்.

    Democracy DMK K.N.Nehru Tamil Nadu Politics Udhayanidhi Stalin
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉதயநிதிக்கு நாவடக்கம் தேவை; பொய்க்கால் அரசுக்கும் எடப்பாடி பழனிசாமி கண்டனம்
    Next Article இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஆசை!. பென் ஸ்டோக்ஸ் அதிரடி பேச்சு!
    Editor TN Talks

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதே…. தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி

    August 4, 2026

    மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறப்பு – இறப்பு பதிவு (திருத்த) மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

    August 4, 2026

    “உதயநிதி பேசிய வக்கிரமான கருத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்கிறாரா?”: அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி!

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதே…. தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி

    மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறப்பு – இறப்பு பதிவு (திருத்த) மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

    “உதயநிதி பேசிய வக்கிரமான கருத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்கிறாரா?”: அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி!

    அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்பான வழக்கு… அமலாக்கத்துறை மனு தள்ளுபடி… உயர்நீதிமன்றம் உத்தரவு!

    உதயநிதியை இன்று மாலைக்குள் விடுவிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.