Close Menu
    What's Hot

    உதயநிதி கைது: “ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்!”: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

    தண்ணில கண்டம்… உதயநிதியை கலாய்க்கும் தவெக ஐ.டி.விங்க்!

    உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதே…. தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா விமானம்! 300 அடி கீழே சரிந்ததால் பயணிகள் படுகாயம்!
    இந்தியா

    நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா விமானம்! 300 அடி கீழே சரிந்ததால் பயணிகள் படுகாயம்!

    Editor web3By Editor web3August 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Air India flight
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புகெட்டிலிருந்து(Phuket) டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம் திடீரென ஏற்பட்ட கடுமையான வானிலை மாற்றத்தால் நடுவானில் சுமார் 300 அடி ஆழத்திற்கு திடீரென கீழே சரிந்தது. இந்தச் சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் எனப் பலர் காயமடைந்தனர்.

    செவ்வாய்க்கிழமை இன்று புகெட்டிலிருந்து டெல்லிக்குப் பறந்த AI2379 என்ற ஏர் இந்தியா விமானம், வழக்கமான பயணத்தின்போது எதிர்பாராதவிதமாகச் கடுமையான காற்றுச் சுழலில் சிக்கியதாக விமான நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஃப்ளைட் ரடார் 24’ தரவுகளின்படி, விமானம் திடீரென ஏற்பட்ட கீழ்நோக்கிய காற்றழுத்தம் காரணமாக 300 அடி உயரம் வரை கீழே இறங்கியுள்ளது.

    புகெட்டிலிருந்து காலை 8:25 மணிக்குக் கிளம்பிய இந்த விமானம், திட்டமிட்டபடி காலை 11:50 மணிக்கு டெல்லியில் பத்திரமாகத் தரையிறங்கியது. பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டனர்.

    https://x.com/ANI/status/2084556278526087431?

    விமானத்தில் பயணம் செய்த பலருக்குச் சிறிய அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக ஏர் இந்தியா கூறியிருந்தது. இருப்பினும், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த சில காட்சிகளில் நிலைமை தீவிரமாக இருந்தது தெரியவந்துள்ளது. ஏஎன்ஐ வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகளின்படி, முகத்தில் காயமடைந்த ஆண் பயணி ஒருவர் தலையிலும் முகத்திலும் கட்டுகளுடன் ஆம்புலன்ஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும், கழுத்தில் காலர் அணிந்தவாறு ஏர் இந்தியா பெண் பணியாளர் ஒருவர் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்படும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

    பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு விமான நிலைய மருத்துவக் குழுவினர் உடனடியாக முதலுதவி மற்றும் அவசர சிகிச்சைகளை வழங்கினர். விமானப் பயணிகளின் பாதுகாப்பே எங்களின் முதன்மையான முன்னுரிமை என்றும், காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் விமான நிறுவனம் வழங்கி வருவதுடன், இந்தச் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து முழுமையான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    12 injured AIR INDIA drops 300 feet Passengers Phuket-Delhi flight turbulence
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஆசை!. பென் ஸ்டோக்ஸ் அதிரடி பேச்சு!
    Next Article உதயநிதியின் பேச்சு அரசியல் தகுதிக்கு பொருத்தமானதில்லை… திருமாவளவன் விமர்சனம்
    Editor web3
    • Website

    Related Posts

    உதயநிதி கைது: “ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்!”: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

    August 4, 2026

    தண்ணில கண்டம்… உதயநிதியை கலாய்க்கும் தவெக ஐ.டி.விங்க்!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதே…. தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உதயநிதி கைது: “ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்!”: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

    தண்ணில கண்டம்… உதயநிதியை கலாய்க்கும் தவெக ஐ.டி.விங்க்!

    உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதே…. தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி

    மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறப்பு – இறப்பு பதிவு (திருத்த) மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

    “உதயநிதி பேசிய வக்கிரமான கருத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்கிறாரா?”: அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.