Close Menu
    What's Hot

    விவசாயிகளின் பிரச்சினைகளைத் திசைதிருப்பவே தவெக அரசு தன்னை கைது செய்தது!- உதயநிதி

    ஆகஸ்ட் 11-ஐ சுதந்திர தினமாக அறிவித்தது பலுசிஸ்தான்: உலக நாடுகளின் அங்கீகாரத்தைக் கோரி பலுச் தலைவர்கள் அதிரடி!

    அஜித்தின் கார் ரேஸ் பயணமான ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம்: விரைவில் ரிலீஸ்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இன்று தாக்கலாகிறது தவெக அரசின் முதல் பட்ஜெட்! நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல்!
    Featured

    இன்று தாக்கலாகிறது தவெக அரசின் முதல் பட்ஜெட்! நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல்!

    Editor web1By Editor web1August 5, 2026Updated:August 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் 2026- 2027-ம் ஆண்டுக்கான முதல் முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) இன்று (ஆகஸ்ட் 5) சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

    கடந்த சட்டமன்றத் தேர்தலில்  வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், மே 10-ம் தேதி ஆட்சிப் பொறுப்பேற்றதும் தோ்தல் அறிக்கை வாக்குறுதிகளான 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் படை, மாவட்ட வாரியாக போதைப் பொருள் தடுப்பு படை ஆகிய 3 உத்தரவு கோப்புகளில் முதலமைச்சர் விஜய் முதல் கையெழுத்திட்டார்.

    இந்தநிலையில், தவெக அரசின் 2026- 2027-ம் ஆண்டுக்கான முதல் முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தயாரிப்பு தொடா்பாக துறைவாரியாக அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வா் விஜய் தனித்தனியாக விரிவாக ஆலோசனை நடத்தினார். இதனை அடிப்படையாகக் கொண்டு நிதியமைச்சா் மரிய வில்சன் பட்ஜெட் தயாரித்துள்ளாா்.

    காலை 10 மணிக்குத் தனது முதல் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து, நாளைய தினம் (ஆகஸ்ட் 6) வேளாண்மைத் துறைக்கெனத் தனி பட்ஜெட்டை அந்தத்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்கிறார்.

    தவெக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்த பல்வேறு முக்கிய திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளின் அமலாக்கம் குறித்த அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    குடும்பத் தலைவிகளுக்கான மாத உதவித்தொகை உயர்வு, இலவச எரிவாயு சிலிண்டர் திட்டங்கள், வேலையில்லா பட்டதாரிகளுக்கான நிதியுதவி மற்றும் இளைஞர்களைக் கவரும் வகையில் புதிய வேலைவாய்ப்புத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம். ‘வெற்றித் தமிழகம்’ என்ற பெயரிலான அரசின் ஐந்தாண்டு தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையில் கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

    பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்ததும், பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில், இக்கூட்டத்தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது குறித்த விவரங்கள் முடிவு செய்யப்படும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதான் படித்த பள்ளிக்கு சொந்த செலவில் 3 மாடி கட்டிடம் கட்டித் தந்த நடிகர் தனுஷ்!
    Next Article முக்கிய பதவி உயர்வு, பணியிட மாற்றங்களுக்கு முதல்வரின் ஒப்புதல் கட்டாயம்: தமிழக அரசு புதிய அரசாணை!
    Editor web1
    • Website

    Related Posts

    விவசாயிகளின் பிரச்சினைகளைத் திசைதிருப்பவே தவெக அரசு தன்னை கைது செய்தது!- உதயநிதி

    August 5, 2026

    ‘கஜினி’, ‘லகான்’ பட புகழ் பிரபல நடிகர் பிரதீப் ராவத் காலமானார்!

    August 5, 2026

    மருதமலை அருகே கருஞ்சிறுத்தை நடமாட்டம்: வைரல் வீடியோவால் பொதுமக்கள் அச்சம்!

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விவசாயிகளின் பிரச்சினைகளைத் திசைதிருப்பவே தவெக அரசு தன்னை கைது செய்தது!- உதயநிதி

    ஆகஸ்ட் 11-ஐ சுதந்திர தினமாக அறிவித்தது பலுசிஸ்தான்: உலக நாடுகளின் அங்கீகாரத்தைக் கோரி பலுச் தலைவர்கள் அதிரடி!

    அஜித்தின் கார் ரேஸ் பயணமான ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம்: விரைவில் ரிலீஸ்!

    TNPL கிரிகெட்: முதல் ஆட்டத்தில் திருப்பூர் அணியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி!

    ‘கஜினி’, ‘லகான்’ பட புகழ் பிரபல நடிகர் பிரதீப் ராவத் காலமானார்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.