Close Menu
    What's Hot

    சென்னை எம்டிசி பஸ்சில் வைரலான ‘தக்காளி வெற்றிக் கழகம்’ வாசகம்.. உண்மை என்ன?

    சென்னை உள்பட 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

    முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தந்தை… இறுதிச் சடங்குக்கு ஆன்லைனில் ரூ.5,100… வீடியோ காலில் பார்வையிட்ட 3 மகள்கள்…

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால்..! உச்சநீதிமன்றம் செல்வோம்..! தமிழக அரசுக்கு கேரளா எச்சரிக்கை..!
    Featured

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால்..! உச்சநீதிமன்றம் செல்வோம்..! தமிழக அரசுக்கு கேரளா எச்சரிக்கை..!

    Editor web4By Editor web4August 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காவிரியில் இருந்து நீர் திறப்பதில் ஒருபுறம் கர்நாடகாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே நீண்ட காலமாக இழுபறி நீடித்து வரும் நிலையில், மறுபுறம் தமிழ்நாட்டில் இருந்து தண்ணீரை திறந்து விடக் கூடாது என கேரளாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே தகராறு நிலவி வருகிறது.

    அந்த வகையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தமிழ்நாடு உயர்த்தினால் உச்சநீதிமன்றம் வரை செல்வோம் என கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள 131 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக தமிழக அரசு பட்ஜெட்டில் நேற்று அறிவிக்கப்பட்டது.

    இதற்கு கேரள மாநிலத்தின் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் மான்ஸ் ஜோசப், “முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை எந்த சூழலிலும் 142 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது என்ற நிலைப்பாட்டில் கேரள அரசு உறுதியாக உள்ளது. அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு மேல் உயர்த்த கேரளா ஒருபோதும் அனுமதிக்காது. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த மிகுந்த கவலைக்குரிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம் முல்லைப் பெரியாறு அணையில் விரிவான பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்ள வேண்டும். அந்த ஆய்வு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பே நடந்திருக்க வேண்டும். இருப்பினும், இதுவரை ஒரு அடிப்படை பாதுகாப்பு தணிக்கை கூட நடத்தப்படவில்லை.

    உச்சநீதிமன்ற உத்தரவிட்ட பாதுகாப்பு ஆய்வு மற்றும் பலப்படுத்தும் நடவடிக்கைகள் கூட இன்னும் முழுமையடையாத நிலையில், தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

    இரு மாநிலங்களுக்கும் ஏற்புடைய நிலைப்பாடுகளை சுப்ரீம் கோர்ட்டு பரிசீலித்து, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே கேரளாவின் நிலைப்பாடு. தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த முயற்சித்தால், கேரளா சுப்ரீம் கோர்ட்டை நாடும். கேரளாவின் நலன்களை மாநில அரசு உறுதியாகப் பாதுகாக்கும்.

    முல்லைப் பெரியாறில் புதிய அணையைக் கட்டுவதே எங்களின் அடிப்படைத் கோரிக்கையாக தொடர்ந்து வருகிறது. கேரள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், தமிழ்நாட்டிற்குத் தேவையான நீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், பரஸ்பர உடன்பாட்டின் மூலம் இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அதுவே மாநிலத்தின் நிலையான நிலைப்பாடாகும்.

    தமிழ்நாடு-கேரளா இடையிலான உறவில், கடந்த 10 ஆண்டுகளில் எதுவும் நடக்கவில்லை. அந்த காலகட்டத்தில் ஏதேனும் முக்கிய முடிவு கூட எடுக்கப்படவில்லை. உறவுகள் இருந்திருக்கலாம், ஆனால் நடைமுறையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை” எனத் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசவுக்கு சங்கர் குடும்பத்தை உலுக்கிய துயரம்… 13 வயது மகன் மரணம்; போலீசார் விசாரணை!
    Next Article 2.30 மணி நேர வேளாண் பட்ஜெட் வாசிப்பு… ‘புதிய திட்டமே இல்லை’.. எடப்பாடி பழனிசாமி சாடல்!
    Editor web4

    Related Posts

    சென்னை எம்டிசி பஸ்சில் வைரலான ‘தக்காளி வெற்றிக் கழகம்’ வாசகம்.. உண்மை என்ன?

    August 6, 2026

    முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தந்தை… இறுதிச் சடங்குக்கு ஆன்லைனில் ரூ.5,100… வீடியோ காலில் பார்வையிட்ட 3 மகள்கள்…

    August 6, 2026

    திருப்பத்தூர் : அனுமதியின்றி மண் கடத்தல்..! 9 டிராக்டர்கள், 2 ஜேசிபி பறிமுதல்..! 11 பேர் கைது..!

    August 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னை எம்டிசி பஸ்சில் வைரலான ‘தக்காளி வெற்றிக் கழகம்’ வாசகம்.. உண்மை என்ன?

    சென்னை உள்பட 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

    முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தந்தை… இறுதிச் சடங்குக்கு ஆன்லைனில் ரூ.5,100… வீடியோ காலில் பார்வையிட்ட 3 மகள்கள்…

    திருப்பத்தூர் : அனுமதியின்றி மண் கடத்தல்..! 9 டிராக்டர்கள், 2 ஜேசிபி பறிமுதல்..! 11 பேர் கைது..!

    தவெக அரசின் பட்ஜெட்டை வரவேற்கிறோம்..! அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி பேட்டி..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.