Close Menu
    What's Hot

    சென்னை உள்பட 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

    முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தந்தை… இறுதிச் சடங்குக்கு ஆன்லைனில் ரூ.5,100… வீடியோ காலில் பார்வையிட்ட 3 மகள்கள்…

    திருப்பத்தூர் : அனுமதியின்றி மண் கடத்தல்..! 9 டிராக்டர்கள், 2 ஜேசிபி பறிமுதல்..! 11 பேர் கைது..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»2.30 மணி நேர வேளாண் பட்ஜெட் வாசிப்பு… ‘புதிய திட்டமே இல்லை’.. எடப்பாடி பழனிசாமி சாடல்!
    Featured

    2.30 மணி நேர வேளாண் பட்ஜெட் வாசிப்பு… ‘புதிய திட்டமே இல்லை’.. எடப்பாடி பழனிசாமி சாடல்!

    editor5By editor5August 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 11 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் முதல் வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி க. பழனிசாமி கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். வேளாண் துறை அமைச்சர் வினோத் சுமார் இரண்டரை மணி நேரம் (129 நிமிடங்கள்) பட்ஜெட் உரையை வாசித்த போதிலும், விவசாயிகளுக்கு பயனளிக்கும் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என அவர் குற்றம்சாட்டினார்.

    காலை 9.30 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் உரை 11.39 மணிக்கு முடிவடைந்தது. இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “தவெக ஆட்சி அமைந்த பின் முதல்முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதனால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது” என்றார்.

    திமுக ஆட்சியில் 20 துறைகளை ஒன்றிணைத்து வேளாண் பட்ஜெட் என அறிவித்த நடைமுறையை தவெக அரசும் பின்பற்றியதாக அவர் சுட்டிக்காட்டினார். ஏற்கனவே ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் மானியக் கோரிக்கை அறிவிப்புகளே மீண்டும் இடம்பெற்றுள்ளதாகக் கூறிய அவர், தேர்தல் வாக்குறுதிகளான நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்புக்கு ரூ.4,500 ஆதார விலை, விதைப்பு காலத்திற்காக இருமுறை ரூ.15,000 உதவி, உழவர் உரிமை அட்டை மூலம் ஆண்டுக்கு ரூ.10,000 உதவி ஆகியவை பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என கேள்வி எழுப்பினார்.

    பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பும் காணாமல் போய்விட்டதாக அவர் குறிப்பிட்டார். அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட குடிமராமத்து திட்டம் குறித்த முழுமையான அறிவிப்புகள் இல்லாததையும் சுட்டிக்காட்டிய எடப்பாடி, “பல துறைகளை இணைத்துவிட்டால் 20 அமைச்சர்கள் எதற்கு?” என கேள்வி எழுப்பினார். பொதுப் பட்ஜெட் 2.31 மணி நேரம் வாசிக்கப்பட்ட நிலையில், வேளாண் பட்ஜெட் 129 நிமிடங்கள் நீடித்த போதிலும் எந்தப் பயனும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், “இந்தப் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் தான் கொடுக்க வேண்டும்” என்றார்.

    காவிரி நீர் பிரச்சினையில் முதலமைச்சர் விஜய் வாய் திறந்து பேசாததையும், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தமிழக முதலமைச்சரை வரவேற்கக் கூடாது எனக் கூறியதைத் தலைகுனிவாகக் கருதியதையும் அவர் விமர்சித்தார். தவெக அரசு திமுக ஆட்சியைப் போலவே விவசாயிகளை ஏமாற்றுவதாகக் கூறி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

    agri budget 2026 Edappadi K. Palaniswami
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால்..! உச்சநீதிமன்றம் செல்வோம்..! தமிழக அரசுக்கு கேரளா எச்சரிக்கை..!
    Next Article அமைச்சர் புஸ்சி ஆனந்துடன் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சந்திப்பு… அரசியல் களத்தில் பரபரப்பு
    editor5

    Related Posts

    சென்னை உள்பட 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

    August 6, 2026

    முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தந்தை… இறுதிச் சடங்குக்கு ஆன்லைனில் ரூ.5,100… வீடியோ காலில் பார்வையிட்ட 3 மகள்கள்…

    August 6, 2026

    திருப்பத்தூர் : அனுமதியின்றி மண் கடத்தல்..! 9 டிராக்டர்கள், 2 ஜேசிபி பறிமுதல்..! 11 பேர் கைது..!

    August 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னை உள்பட 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

    முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தந்தை… இறுதிச் சடங்குக்கு ஆன்லைனில் ரூ.5,100… வீடியோ காலில் பார்வையிட்ட 3 மகள்கள்…

    திருப்பத்தூர் : அனுமதியின்றி மண் கடத்தல்..! 9 டிராக்டர்கள், 2 ஜேசிபி பறிமுதல்..! 11 பேர் கைது..!

    தவெக அரசின் பட்ஜெட்டை வரவேற்கிறோம்..! அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி பேட்டி..!

    மீண்டும் உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்ற இபிஎஸ்… தலைமைச் செயலகத்தில் சுவாரஸ்யம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.