தவெக அரசு பொறுப்பேற்றப் பிறகு முதன் முறையாக சட்டமன்றத்தில், தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இதற்கு பல அரசியல் தலைவர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் மரிய வில்சன் மற்றும் வேளாண்மை அமைச்சர் வினோத் ஆகியோருக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
”தமிழ்நாட்டின் வளர்ச்சியை இலக்காகவும், மக்கள் நலனை மையமாகவும் கொண்டு, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் அனைவரும் பாராட்டும் வகையில் 2026 – 27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. நெ.மரிய வில்சன் அவர்களுக்கும், வேளாண்மை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய திருத்திய நிதிநிலை அறிக்கையானது மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழில்முனைவோர், அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கும் புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
வேளாண்மை நிதிநிலை அறிக்கையானது, தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சியோடு, அதன் தொழில்சார்ந்த கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு, பால்வளம், உணவுப் பொருட்களைப் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் போன்ற தொழில்களையும் மேம்படுத்துவதோடு, அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனையும் வாழ்வாதாரத்தையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்” என பதிவிட்டுள்ளார்.
