கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் (22). இவர் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் பணிக்கு சென்று வந்த நிலையில் இரவு தனது நண்பர்கள் வீட்டில் படுத்து உறங்கி உள்ளார். அப்போது நள்ளிரவில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு இருந்த இரண்டு நண்பர்கள் அஸ்வினின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு,கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து கொலை செய்யப்பட்ட அஸ்வின் முன்பு செல்ஃபி எடுக்கப்பட்ட நிலையில் அந்த புகைப்படங்களை சக நண்பர்களுக்கு பகிர்த்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் அஸ்வினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இந்த கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உறங்கிக் கொண்டிருந்த நண்பனை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அந்த புகைப்படங்களை சக நண்பர்களுக்கு பகிர்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
