Close Menu
    What's Hot

    எடப்பாடி பெயரை தவிர்த்த எஸ்பி வேலுமணி.. அதிமுகவினர் எதிர்ப்பு முழக்கம்.. நடந்தது என்ன?

    விவாகரத்து வழக்கில் நீடிக்கும் தாமதம்.. விஜய் – சங்கீதா வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!!

    அரசு சேவைகளை தனியார்மயமாக்குவது இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும்: அன்புமணி எதிர்ப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நிவாரணம் vs சிறப்பு தொகுப்பு.. சட்டப்பேரவையில் வித்தியாசத்தை சுட்டிக்காட்டிய உதயநிதி!
    Featured

    நிவாரணம் vs சிறப்பு தொகுப்பு.. சட்டப்பேரவையில் வித்தியாசத்தை சுட்டிக்காட்டிய உதயநிதி!

    editor5By editor5August 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 17 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காவிரி நதி நீர் பிரச்சினை மற்றும் விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய்க்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என உதயநிதி வலியுறுத்தியதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் பதிலடி கொடுத்துள்ளனர்.

    காவிரி தமிழகத்தின் உயிர்நாடி என்றும், அதில் அரசியல் செய்யும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் முதல்வர் விஜய் தெரிவித்தார். மேகதாது அணை தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றியதை நினைவுபடுத்திய அவர், தமிழகத்தின் உரிமைகளை எவ்வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என உறுதியளித்தார்.

    பிரச்சினையை நேர்மறையாகத் தீர்க்கும் நோக்கில் பெங்களூருக்குச் செல்லத் திட்டமிட்டதாகவும், தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். குறுவை சாகுபடிக்கான நிவாரணம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய விஜய், “முன்னும் பின்னும் பேப்பர் படித்திருந்தால் நாட்டில் என்ன நடக்கிறது எனத் தெரிந்திருக்கும்” என எதிர்க்கட்சியை விமர்சித்தார்.

    இதற்கு உதயநிதி ஸ்டாலின் கடும் பதிலடி கொடுத்தார். “பேப்பர் படிச்சா மட்டும் போதாது. எது நிவாரணம், எது சிறப்புத் தொகுப்பு என்பதைத் தெரிந்திருக்கணும்” என அவர் கூறினார். ரூ.164 கோடி சிறப்புத் தொகுப்பு எல்லா அரசுகளும் வழங்குவதுதான். அதைத் தவெக அரசும் வழங்கியுள்ளது. ஆனால் தற்போது விவசாயிகள் வறட்சி நிவாரணம் கோருகின்றனர். இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    கர்நாடக முதல்வர் மேகதாது அணைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்திய நிலையில், தமிழகம் எப்போது அத்தகைய கூட்டத்தைக் கூட்டப்போகிறது எனக் கேள்வி எழுப்பினார். விவசாயிகளைச் சந்தித்து, அனைத்துக் கட்சிகளையும் அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும் என்றும், அரசுக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த என்ன பயம் என்றும் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

    காவிரி பிரச்சினை உணர்வு ரீதியானது என்பதால் அரசியலுக்கு அப்பால் அணுகப்பட வேண்டும் என்பதில் இரு தரப்பினரும் உடன்பட்டாலும், நிவாரணம் மற்றும் அனைத்துக் கட்சி ஆலோசனை குறித்த விவாதம் தொடர்கிறது.

    cm vijay tn assembly Udhayanidhi Stalin
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்திற்கு நியாயமான நிதிப் பகிர்வு வேண்டும்!. பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்! திமுக, அதிமுக ஆதரவு!
    Next Article போராடும் இளைஞர்,  மாணவர்கள் மீது தேச விரோத முத்திரை… CJP நிறுவனர் அபிஜீத் திப்கே எதிர்ப்பு
    editor5

    Related Posts

    எடப்பாடி பெயரை தவிர்த்த எஸ்பி வேலுமணி.. அதிமுகவினர் எதிர்ப்பு முழக்கம்.. நடந்தது என்ன?

    August 7, 2026

    விவாகரத்து வழக்கில் நீடிக்கும் தாமதம்.. விஜய் – சங்கீதா வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!!

    August 7, 2026

    அரசு சேவைகளை தனியார்மயமாக்குவது இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும்: அன்புமணி எதிர்ப்பு

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எடப்பாடி பெயரை தவிர்த்த எஸ்பி வேலுமணி.. அதிமுகவினர் எதிர்ப்பு முழக்கம்.. நடந்தது என்ன?

    விவாகரத்து வழக்கில் நீடிக்கும் தாமதம்.. விஜய் – சங்கீதா வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!!

    அரசு சேவைகளை தனியார்மயமாக்குவது இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும்: அன்புமணி எதிர்ப்பு

    UPI கட்டணம் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்.. யாருக்கு பொருந்தும்? முழு தகவல்!

    ’நீட் தேர்வு வினாக்களை மனப்பாடம் செய்து கொண்டு சென்ற பாட நிபுணர்கள்’- அதிர்ச்சி தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.