Close Menu
    What's Hot

    மாதம் ரூ.2,500 எங்கே.?. எங்களிடம் எல்லோரும் கேட்கிறார்கள்?. பாமக எம்.எல்.ஏ கணேஷ் குமார்!.

    பதவி விலகிய பசவராஜ் ஹொரட்டி.. ‘ராஜினாமா செய்ய காங்கிரஸ் கேட்டது’ என பரபரப்பு பேட்டி!!

    முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரும் மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா; வழக்கு முடித்து வைப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஓவர் ரேட்டுக்கு மது விற்றால் தப்ப முடியாது.. டாஸ்மாக் கடைகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை..!!
    Featured

    ஓவர் ரேட்டுக்கு மது விற்றால் தப்ப முடியாது.. டாஸ்மாக் கடைகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை..!!

    editor5By editor5August 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 34
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுபான விற்பனையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. நுகர்வோர் கூட்டம் அதிகமாக உள்ள கடைகளில் காவலர்களை நிறுத்தி பாதுகாப்பு வழங்க உள்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டால் உடனடியாக போலீசில் புகார் அளிக்க வேண்டும் என்றும், அத்தகைய புகார்களை ஏற்று காவல்துறை உடனே வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

    இந்த உத்தரவு, செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் வந்துள்ளது. அவர், சென்னையின் பெரம்பூர், கொளத்தூர், மாதவரம் உள்ளிட்ட 30 டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்ததாகக் குற்றம்சாட்டினார். இதற்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் ஆகியவற்றின் கீழ் லஞ்ச ஒழிப்புத் துறையும் அமலாக்கத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினார்.

    மேலும், 2022 முதல் 2026 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட ஊழியர்களிடமிருந்து மீட்டெடுத்து அரசுக்குச் செலுத்தவும், அவர்களுக்குப் பணி நீக்கம் உள்ளிட்ட தண்டனை நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார். நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதிக கூட்டத்தால் ரசீது வழங்குவதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மனுதாரர், நேற்றும் கூட ரசீது வழங்கப்படாமல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் தெரிவித்தார்.

    இதற்கு நீதிபதி கடுமையாக எதிர்வினையாற்றினார். சூப்பர் மார்க்கெட்டில் டூத் பேஸ்ட் வாங்கினாலும் ரசீது வழங்கும் நிலையில், மாநில அரசுக்கு பெரும் வருவாய் ஈட்டித் தரும் டாஸ்மாக் கடைகளில் ஏன் சிரமம் எனக் கேள்வி எழுப்பினார். கூட்டத்தை முறைப்படுத்த காவலர்களை நியமிக்கலாம் என்றும் பரிந்துரைத்தார். மேலும், நுகர்வோர் தாங்களே கூடுதல் தொகை கொடுக்காமல் இருப்பதே முக்கியம் என சுட்டிக்காட்டிய நீதிபதி, அரசு உத்தரவுகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் போலீசில் புகார் அளிக்க உத்தரவிட்டார்.

    அத்தகைய புகார்கள் மீது உடனடி வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரசீது புத்தகங்களைப் பராமரித்து, ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரசீது வழங்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நீதிமன்றம், இந்த உத்தரவுகளையும் உறுதிப்படுத்தியுள்ளது.

    மனுதாரர் அளித்த புகார் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் டாஸ்மாக் விற்பனையில் முறைகேடுகளைக் கட்டுப்படுத்தி நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Chennai High Court Tasmac
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article’மத்திய அரசிடம் தவெக அரசு சத்தமில்லாமல் சரணாகதி’
    Next Article நாளை முதல்வர் விஜய் தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம்!. திமுக புறக்கணிக்க முடிவு?
    editor5

    Related Posts

    மாதம் ரூ.2,500 எங்கே.?. எங்களிடம் எல்லோரும் கேட்கிறார்கள்?. பாமக எம்.எல்.ஏ கணேஷ் குமார்!.

    August 7, 2026

    பதவி விலகிய பசவராஜ் ஹொரட்டி.. ‘ராஜினாமா செய்ய காங்கிரஸ் கேட்டது’ என பரபரப்பு பேட்டி!!

    August 7, 2026

    முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரும் மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா; வழக்கு முடித்து வைப்பு!

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாதம் ரூ.2,500 எங்கே.?. எங்களிடம் எல்லோரும் கேட்கிறார்கள்?. பாமக எம்.எல்.ஏ கணேஷ் குமார்!.

    பதவி விலகிய பசவராஜ் ஹொரட்டி.. ‘ராஜினாமா செய்ய காங்கிரஸ் கேட்டது’ என பரபரப்பு பேட்டி!!

    முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரும் மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா; வழக்கு முடித்து வைப்பு!

    சமூகநீதி, மனிதநேயத்துக்கு எதிராக தவெக அரசின் அணுகுமுறை ஆபத்தானது!. அன்புமணி சாடல்!

    திட்டங்களின் பெயர் மாற்றம் காலம் காலமாக நடப்பதுதான்!. தொல். திருமாவளவன்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.