Close Menu
    What's Hot

    தமிழ்நாடு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா..! 2 நாள் பயணத்தின் முழு விவரம்..!

    கோயில்களில் விஐபி தரிசனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!. ஆணையர் வினய் அதிரடி உத்தரவு!

    பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கு..! கைதாகி சிறையில் இருந்தவர் உயிரிழப்பு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»ரஷ்ய எரிசக்தி துறைக்கு எதிராக அமெரிக்க செனட்டில் புதிய மசோதா!. இந்தியா, சீனாவுக்கு பாதிப்பு?
    உலகம்

    ரஷ்ய எரிசக்தி துறைக்கு எதிராக அமெரிக்க செனட்டில் புதிய மசோதா!. இந்தியா, சீனாவுக்கு பாதிப்பு?

    Editor web3By Editor web3August 8, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Rise in crude oil prices
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உக்ரைன் மீதான போருக்கு நிதி திரட்டுவதைத் தடுக்கும் நோக்கில், ரஷ்யாவின் எரிசக்தித் துறை மற்றும் அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது கடும் தடைகளை விதிக்க வகை செய்யும் புதிய மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    ‘லிண்ட்சே ஓ கிரகாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026’ (Lindsey O Graham Sanctioning Russia and Iran Act of 2026) என்ற பெயரிலான இந்த மசோதாவுக்கு ஆதரவாக 86 வாக்குகளும், எதிர்த்து 11 வாக்குகளும் பதிவாகின. உக்ரைன் போரைக் காரணம்காட்டி ரஷ்யா மீது தடைகளை விதிக்க தீவிரமாக வலியுறுத்தி வந்த குடியரசுக் கட்சியின் மூத்த செனட்டர் லிண்ட்சே கிரகாம் கடந்த ஜூலை 11 அன்று காலமானதைத் தொடர்ந்து, அவரது நினைவாகவே இந்த மசோதாவுக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு கோடைகால விடுமுறை என்பதால், பிரதிநிதிகள் சபையில் இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த மசோதாவின் முதன்மை இலக்கு ரஷ்யாவின் எரிசக்தி துறையாகும். இது சட்டமானால், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது 500 சதவீதம் வரை வரிகளை விதிக்க டிரம்பின் நிர்வாகத்திற்கு அதிகாரம் கிடைக்கும்.

    மேலும், ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா, அஜர்பைஜான், ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய ஐந்து நாடுகளின் இறக்குமதிகள் மீதும் 100 சதவீதம் வரை கூடுதல் வரிகளை விதிக்க இந்த மசோதா அமெரிக்க அரசுக்கு வழிவகை செய்கிறது.

    எரிசக்தித் துறையைத் தவிர்த்து, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், அந்நாட்டின் முக்கிய அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீதும் தடைகள் விதிக்கப்படவுள்ளன. அத்துடன், ஈரான் எரிசக்தித் துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்குத் தண்டனை விதிக்கும் ‘ஈரான் தடைகள் சட்டம் 1996’-ன் காலவரையறை 2031 வரை நீட்டிக்கப்பட உள்ளது.

    இந்த நடவடிக்கை ரஷ்யாவைப் பேச்சுவார்த்தைக்குக் கொண்டுவந்து போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் என அமெரிக்கக் குடியரசுக் கட்சியினர் தெரிவிக்கின்றனர். ஆனால், அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகளை ஆயுதமாகப் பயன்படுத்தி வர்த்தகப் போரை உருவாக்குவதாகவும், இதனால் அமெரிக்க மக்களே பாதிப்புக்குள்ளாவார்கள் என்றும் ஜனநாயகக் கட்சியினர் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்துள்ளனர்.

    affect India and China? energy sector target Russia US Senate passes bill
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடாஸ்மாக்கில் கூடுதல் கட்டணத்துக்கு முற்றுப்புள்ளி!. ஆன்லைன் முறை குறித்து அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!
    Next Article இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடர்!. இலவசமாக நேரில் பார்க்கலாம்! இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    ஜப்பானை மிரட்டும் ‘டால்பின்’ புயல்!. விமான நிலையம் மூடல்; முடங்கிய இயல்பு வாழ்க்கை!

    August 8, 2026

    நாய்களை ஃபீல்டர்களாக மாற்றி கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள்!. நெகிழ்ச்சி வீடியோ!

    August 7, 2026

    மெட்டாவுக்கு பேரிடி!. ரூ.4,800 கோடி அபராதம்; சிறுவர் மனநல வழக்கில் அதிரடி!. இந்தியாவில் தொடரும் விசாரணை!

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழ்நாடு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா..! 2 நாள் பயணத்தின் முழு விவரம்..!

    கோயில்களில் விஐபி தரிசனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!. ஆணையர் வினய் அதிரடி உத்தரவு!

    பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கு..! கைதாகி சிறையில் இருந்தவர் உயிரிழப்பு..!

    தமிழகத்தின் உரிமையை காக்க வியூகம்!. எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை!. 

    இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடர்!. இலவசமாக நேரில் பார்க்கலாம்! இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.