Close Menu
    What's Hot

    இலங்கை சிறையில் வெடித்த கைதிகள் வன்முறை: 3 பேர் உயிரிழப்பு.. போலீசார் குவிப்பு!

    பழனி நில மோசடி வழக்கில் பரபரப்பு: ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் மருத்துவமனையில்… ஜெயபிரகாஷ் எங்கே?

    சாய் சுதர்சனுக்கு காயம்.. இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு புதிய சிக்கல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»“திமுகவை யாராலும் முடக்க முடியாது; முதல்வர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்”!. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ!
    தமிழ்நாடு

    “திமுகவை யாராலும் முடக்க முடியாது; முதல்வர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்”!. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ!

    Editor web3By Editor web3August 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 markandeyan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த விளாத்திகுளம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், நீதிமன்ற உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று நேரில் வந்து கையெழுத்திட்டார்.

    அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலவரம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்குப் பல முதலீடுகள் சென்றுவிட்டதாகவும், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வந்தால் வழக்கு போட்டுவிடுவார்களோ என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே நிலவுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

    தி.மு.க.வினரைக் கைது செய்து முடக்கிவிடலாம் என்று யாரும் கனவு காண வேண்டாம் என்று குறிப்பிட்ட அவர், தி.மு.க. எதற்கும் அச்சப்படும் கட்சியல்ல என்றும், ஜனநாயக முறையில் கருத்துக்களை வெளிப்படுத்தும் வலிமையான இயக்கம் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழக முதல்வர் பக்குவமாக நடந்து கொண்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், ஆனால் இந்த அரசு தங்களை ஏதோ சர்வதேச குற்றவாளிகள் போல நடத்திக் காவல்துறையைக் குவித்து பயமுறுத்துவதாகவும் அவர் குறை கூறினார்.

    மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் எந்தவொரு தேர்தல் வாக்குறுதித் திட்டமும் இடம்பெறவில்லை என்று சாடிய அவர், ஜனநாயகம் எங்கு மறுக்கப்படுகிறதோ அது வெற்றிடமாகிவிடும் என்றார். முன்னாள் அமைச்சர் சேகர்பாபு திருத்தணியில் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்த கேள்விக்கு, அவர் ஒரு பக்திமான் என்றும், பகவான் கொடுத்த சோதனையைப் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டு சாமி கும்பிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

    மேலும், நேற்று சட்டமன்றத்தில் தான் பேசியதை மறந்துவிடுமாறு சபாநாயகரிடம் கூறியது குறித்த கேள்விக்கு, தூத்துக்குடி மண்ணுக்கே உரித்தான வேகத்தையும் விவேகத்தையும்தான் வெளிப்படுத்தியதாகவும், அதைச் சட்டப்பேரவையில் மேலும் விவாதித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்பதற்காகவே அவ்வாறு சொன்னதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

    cm vijay DMK mla markandeyan
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக அரசின் மடைமாற்று அரசியல் நாடகத்துக்கு துணைபோக மாட்டோம்!. அதிமுக!
    Next Article சாய் சுதர்சனுக்கு காயம்.. இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு புதிய சிக்கல்!
    Editor web3
    • Website

    Related Posts

    இலங்கை சிறையில் வெடித்த கைதிகள் வன்முறை: 3 பேர் உயிரிழப்பு.. போலீசார் குவிப்பு!

    August 8, 2026

    பழனி நில மோசடி வழக்கில் பரபரப்பு: ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் மருத்துவமனையில்… ஜெயபிரகாஷ் எங்கே?

    August 8, 2026

    சாய் சுதர்சனுக்கு காயம்.. இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு புதிய சிக்கல்!

    August 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இலங்கை சிறையில் வெடித்த கைதிகள் வன்முறை: 3 பேர் உயிரிழப்பு.. போலீசார் குவிப்பு!

    பழனி நில மோசடி வழக்கில் பரபரப்பு: ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் மருத்துவமனையில்… ஜெயபிரகாஷ் எங்கே?

    சாய் சுதர்சனுக்கு காயம்.. இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு புதிய சிக்கல்!

    “திமுகவை யாராலும் முடக்க முடியாது; முதல்வர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்”!. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ!

    தவெக அரசின் மடைமாற்று அரசியல் நாடகத்துக்கு துணைபோக மாட்டோம்!. அதிமுக!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.