Close Menu
    What's Hot

    சிலிண்டருக்கு ஆப்பு வைக்கும் மத்திய அரசு!. அதிர வைக்கப் போகும் புதிய மின்சாரத் திட்டம்!

    Gen Z தலைமுறையினருக்காகவே பதவியை விட்டேன்!. தர்மேந்திர பிரதான் உருக்கமான பேச்சு!

    பயணி லேட்டா வந்தா விமானம் நிக்குமா?. இண்டிகோ விமானத்தில் நடந்த ரகளை!. பைலட் செயலால் டென்ஷனான பயணிகள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பயணி லேட்டா வந்தா விமானம் நிக்குமா?. இண்டிகோ விமானத்தில் நடந்த ரகளை!. பைலட் செயலால் டென்ஷனான பயணிகள்!
    Featured

    பயணி லேட்டா வந்தா விமானம் நிக்குமா?. இண்டிகோ விமானத்தில் நடந்த ரகளை!. பைலட் செயலால் டென்ஷனான பயணிகள்!

    Editor web3By Editor web3August 9, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    indigo flight delhi airport
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் செல்லவிருந்த இண்டிகோ விமானத்தின் பைலட் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், விமானத்தில் இருந்த 175-க்கும் மேற்பட்ட பயணிகள் சுமார் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

    டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 8.20 மணிக்கு ஜெய்ப்பூர் புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் (6E 6131), இரவு 9.09 மணிக்குத்தான் புறப்பட்டது. இந்த விமானத்தில் ராஷ்டிரிய லோக்தந்திர கட்சி (RLP) நிறுவனரும், நாகூ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஹனுமான் பெனிவால் உட்பட 175-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். வழக்கமாக உள்நாட்டு விமானங்களை இயக்கும் விமானக் குழுவினர், விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகப் பணிக்கு வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், பலத்த மழை மற்றும் சாலைகளில் தேங்கியிருந்த தண்ணீர் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக பைலட் வர தாமதமாகியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

    விமானத்தில் நீண்ட நேரம் காத்திருந்தது குறித்துப் பேசிய எம்பி ஹனுமான் பெனிவால், “டெல்லியின் வானிலை நிலவரம் அனைவருக்குமே தெரியும். போக்குவரத்து பிரச்சினைகளை முன்கூட்டியே யூகித்து நான் மாலை 6.05 மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட்டுவிட்டேன். ஆனால் பைலட் ஏன் முன்கூட்டியே கிளம்பவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

    விமானத்தில் அமர்ந்த பிறகும் விமானம் கிளம்பாததால், தான் விமானப் பணியாளர்களிடம் விசாரித்த பிறகே பைலட் வரவில்லை என்ற விவரம் தெரியவந்ததாக அவர் கூறினார். “மோசமான வானிலை காரணமாக விமானம் தாமதமாவதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், பைலட்டின் இதுபோன்ற கவனக்குறைவை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அவர் தெரிவித்தார்.

    மேலும், வேறு ஒரு இண்டிகோ விமானம் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்ததும், அந்த விமானத்தின் பைலட் அவசரமாக அழைத்துவரப்பட்டு தங்களுடைய விமானத்தை இயக்கினார் என்று அவர் கூறினார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஒரு பயணி ஏதேனும் காரணத்திற்காக ஒரு மணி நேரம் தாமதமாக வந்தால், அவருக்காக விமானம் ஒரு மணி நேரம் காத்திருக்குமா?” என்று கேள்வி எழுப்பியதோடு, சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் இண்டிகோ நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    இண்டிகோ நிறுவனத்தின் விளக்கம்: இந்தச் சம்பவம் குறித்துப் பதிலளித்துள்ள இண்டிகோ நிறுவனம், எதிர்பாராத சூழ்நிலைகள் சில சமயங்களில் விமானச் செயல்பாடுகளைப் பாதிப்பதாகத் தெரிவித்தது. “பெருமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், விமானம் தாமதமானது. பயணிகளுக்குத் தொடர்ந்து அறிவிப்புகள் வழங்கி நிலைமை விளக்கப்பட்டது” என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    delhi airport Delhi to Jaipur Flight 6E 6131 Indigo flight Passengers wait pilot stuck rain traffic
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமெரிக்கா தனது போக்கை மாற்றிக்கொள்ளும் வரை ஹார்மூஸ் திறக்கப்படாது!. புதிய நிபந்தனை விதித்த ஈரான்!
    Next Article Gen Z தலைமுறையினருக்காகவே பதவியை விட்டேன்!. தர்மேந்திர பிரதான் உருக்கமான பேச்சு!
    Editor web3
    • Website

    Related Posts

    சிலிண்டருக்கு ஆப்பு வைக்கும் மத்திய அரசு!. அதிர வைக்கப் போகும் புதிய மின்சாரத் திட்டம்!

    August 9, 2026

    Gen Z தலைமுறையினருக்காகவே பதவியை விட்டேன்!. தர்மேந்திர பிரதான் உருக்கமான பேச்சு!

    August 9, 2026

    அமெரிக்கா தனது போக்கை மாற்றிக்கொள்ளும் வரை ஹார்மூஸ் திறக்கப்படாது!. புதிய நிபந்தனை விதித்த ஈரான்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சிலிண்டருக்கு ஆப்பு வைக்கும் மத்திய அரசு!. அதிர வைக்கப் போகும் புதிய மின்சாரத் திட்டம்!

    Gen Z தலைமுறையினருக்காகவே பதவியை விட்டேன்!. தர்மேந்திர பிரதான் உருக்கமான பேச்சு!

    பயணி லேட்டா வந்தா விமானம் நிக்குமா?. இண்டிகோ விமானத்தில் நடந்த ரகளை!. பைலட் செயலால் டென்ஷனான பயணிகள்!

    அமெரிக்கா தனது போக்கை மாற்றிக்கொள்ளும் வரை ஹார்மூஸ் திறக்கப்படாது!. புதிய நிபந்தனை விதித்த ஈரான்!

    2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!. 42 ராணுவ வீரர்கள் பலி!. நைஜர் நாட்டில் சோகம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.