Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் பிரதமர் நரேந்திர மோடி!!
    இந்தியா

    முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் பிரதமர் நரேந்திர மோடி!!

    Editor TN TalksBy Editor TN TalksMay 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    modi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

    டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல், பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் மே 22-ம் தேதி கொடூர தாக்குதல் நடத்தி சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்திய ராணுவம் மே 7-ம் தேதி மேற்கொண்டு, பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசியது. இதில், 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இதையும் படிக்க: சேட்டிலைட் மூலம் பாக். பயங்கரவாதிகள் கண்காணிப்பு? செலவு இவ்வளவு கோடியா?

    ஆபரேஷன் சிந்தூருக்கு மறுநாள், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள 15 முக்கிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் 400 ட்ரோன்களை பாகிஸ்தான் வீசியது. இந்தியா தனது அதிநவீன ஆயுதங்களான எல்-70 பீரங்கி, சில்கா பீரங்கி, எஸ்-400 (சுதர்சன சக்கரம்) உள்ளிட்டவற்றால் பாகிஸ்தானுக்கு கடுமையாக பதிலடி கொடுத்தது.

    பாகிஸ்தான் வீசிய ட்ரோன்கள், ஏவுகணைகளை இந்திய படைகள் வெற்றிகரமாக நடுவானிலேயே தகர்த்து அழித்து, பாகிஸ்தானின் பதில் தாக்குதலை முறியடித்தன. பாகிஸ்தானின் 3 முக்கிய விமான தளங்கள் உட்பட 8 ராணுவ மையங்களை குறிவைத்து, இந்திய போர் விமானங்கள் மே 10-ம் தேதி காலை தாக்குதல் நடத்தின. இதில் பாகிஸ்தானுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.

    இந்த சூழலில், இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தீவிரம் அடைந்ததால், அமெரிக்க அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக போர் நிறுத்தம் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, இந்தியாவும் சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து, போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தானும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டன.

    இதையும் படிக்க: புதிதாக திறக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி அலகு

    இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் நேற்று (மே 11) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறினால், தக்க பதிலடி கொடுக்குமாறு முப்படைகளுக்கும் பிரதமர் மோடி உத்தரவிட்டார். தீவிரவாத ஊடுருவலை முற்றிலும் தடுப்பதற்கான வழிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    இந்த முன்னிலையில், இன்றும் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    india attack pakistan India operation sindoor india pakistan conflict india pakistan news India Pakistan War Indian Army operation sindoor indian army operation sindoor latest news in tamil operation sindoor pakistan operation sindoor press release operation sindoor time pakistan attack news in tamil ஆபரேஷன் சிந்தூர் ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தான் இந்திய ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவம் இந்தியா இந்தியா தாக்குதல் பாகிஸ்தான் இந்தியா பாகிஸ்தான் செய்திகள் இந்தியா பாகிஸ்தான் போர் பாகிஸ்தான் பாகிஸ்தான் தாக்குதல் செய்திகள்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த விராட் கோலி..ரசிகர்கள் ஷாக்..
    Next Article எடப்பாடி பழனிசாமி – தொண்டன் முதல் தலைவன் வரை…..
    Editor TN Talks

    Related Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    April 6, 2026

    உலகளாவிய சவால்களை முறியடித்து இந்தியா சாதனை!. ஜெய்சங்கர் பெருமிதம்!

    April 6, 2026

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    April 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    April 6, 2026

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    April 6, 2026

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    April 6, 2026

    தமிழ்நாடு தேர்தல்!. இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு!.

    April 6, 2026

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.