Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»ராசிபலன்»செவ்வாய்கிழமை விரதம் இருங்க.. சொந்த வீடு கட்டும் யோகம் தேடி வரும்!
    ராசிபலன்

    செவ்வாய்கிழமை விரதம் இருங்க.. சொந்த வீடு கட்டும் யோகம் தேடி வரும்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250520 WA0001
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    செவ்வாய்க்கிழமை ஒரு புனிதமான கிழமையாகும். மங்களவாரம் என அழைக்கப்படும் இந்த நாளைத்தான் பலரும் விரதமிருக்க தேர்ந்தெடுக்கின்றனர். இந்தக் கிழமை முருகனுக்கும், அம்மனுக்கும் உகந்த கிழமையாகும். சொந்த வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த நாட்களில் விரதம் இருந்து வணங்கினால் பூமி யோகம் தேடி வரும் என்பது நம்பிக்கை. செவ்வாய்கிழமை எப்படி விரதம் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

    பூமாதேவியின் மைந்தன்

    மகாவிஷ்ணுவின் மனைவியான பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவர் செவ்வாய் என புராணம் தெரிவிக்கிறது. பொறுமையின் இலக்கணமான பூமாதேவியின் ஆசியைப் பெற்றால் வாழ்வு சிறக்கும். சொந்தவீடு அமையவும், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சேரவும் செவ்வாயை வழிபடலாம்.

    செவ்வாய் வருவாய் என்று சொல்லுவார்கள். செவ்வாய்கிழமை அன்று மட்டும் நமது வேண்டுதலை எந்த தெய்வத்திடமும் வைத்தாலும் அந்த வேண்டுதலை உடனே நிறைவேற்றிக்கொடுக்கும். மங்களகாரகன் என்று அனைவராலும் போற்றப்படுவது செவ்வாய். வீரத்தின் நாயகன் செவ்வாய்க்கு உகந்த நாள் செவ்வாய்கிழமை. புனிதமான இந்த கிழமையைத்தான் பலரும் விரதமிருக்க தேர்ந்தெடுப்பது இந்தக்கிழமையைத்தான். முருகனுக்கும், அம்மனுக்கும் உகந்த கிழமை செவ்வாய்.

    மன தைரியம் தரும் செவ்வாய் பகவான்

    செவ்வாய் கிழமைக்கு என்று ஒரு வேகம் உண்டு. செவ்வாய்கிழமை அன்று பரிகாரம் செய்தால் அதற்கு பலன் கிடைக்கும். செவ்வாய்கிழமை அன்று ஒரு பொழுது விரதம் இருந்து வந்தால் ஒன்பது வாரத்தில் உங்களுக்கு நல்லது நடக்கும். வியாபாரம் செய்பவர்கள் கண்டிப்பாக செவ்வாய் வழிபாட்டை செய்து வந்தால் வியாபாரம் பெரிய அளவில் விருத்தி செய்யலாம். நல்ல தைரியத்தை கொடுத்து நாம் எடுத்து வைக்கும் எல்லா வியாபாரமும் வெற்றியை தரும்.

    எப்படி விரதம் இருப்பது?

    செவ்வாய்க்கிழமை நாட்களில் காலையில் குளித்து அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். பிறகு வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ளவேண்டும். கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம். மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்தால், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கிவிடும் என்பது உறுதி.

    செவ்வாய் பகவானின் அருள்

    ஒருவர் வீடு கட்ட வேண்டுமென்றால் பூமி காரகன் செவ்வாய் கிரகத்தின் அருள் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் செவ்வாய் கிழமையில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதில்லை, பொருட்கள் வாங்குவதில்லை என்று வழக்கம் இருக்கிறது. உண்மையில் இந்தக் கிழமை மங்களகரமானது, சிறப்புக்குரியது. செவ்வாய்க்கு மங்களன், பூமிகாரகன் என்று பெயர் உண்டு. பெயரிலேயே மங்களம் இருப்பதால், அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும். கேரள மக்கள் செவ்வாய்க்கிழமையில் திருமணம் நடத்துகின்றனர். செவ்வாய் பகவானையும், முருகப்பெருமானையும், பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாயில் மங்களப்பொருள் வாங்கினால் பன்மடங்கு பெருகுவதோடு, எல்லாச் சிறப்புகளும் நம்மைத் தேடி வரும்.

    முருகனுக்கு உகந்த செவ்வாய்கிழமை விரதம்

    செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்னைகள் உள்ளவர்களும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும். செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு தோஷம் நீங்கி திருமண பாக்கியம் கிடைக்கும்.

    11 செவ்வாய்கிழமை விரதம்

    11 செவ்வாய் கிழமைகளில் முருகனை வணங்கி வர, வாழ்வில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். நிலம் வாங்கி, வீடு கட்டும் கனவு நிஜமாகும். ஒன்பது செவ்வாய்க்கிழமைகள், தொடர்ந்து முருகன் கோவிலுக்கு சென்று மனதார வணங்குவதால் ஜாதக ரீதியான கோளாறுகள் தணிந்து, கட்டுப்பாட்டுக்கு வரும். சொந்த வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம். 11 செவ்வாய்கிழமை 1 ரூபாய் 2 எடுத்து சந்தன குங்குமம் வைத்து முருகன் படத்திற்கு கீழே வைத்து வீடு கட்ட வேண்டும் என்று வேண்டிக்கொண்டு கந்த சஷ்டி கவசம் படித்தால் செவ்வாய் தோஷத்திற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம் கிடைக்கும். சொந்த வீடு கட்டுவதற்கான யோகம் தேடி வரும்.

    aanmeegam aanmeegam tips aanmeegam viratham astrology chevvai kizhamai viratham lord mars for land and own residence lord murugan lord murugan viratham Own house viratham ஆன்மிகம் செவ்வாய் கிழமை விரதம் செவ்வாய் சொந்த வீடு கட்டும் யோகம் செவ்வாய் தோஷம் நீங்கும் விரதம் சொந்த வீடு கட்ட விரதம் முருகன் ஜோதிடம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநடிகர் விஷாலுக்கு டும் டும் டும்… காதலை போட்டு உடைத்த இயக்குநர்…
    Next Article கடன் பிரச்சினை தீர்க்கும் தேய்பிறை அஷ்டமி விரதம்.. கால பைரவரை எப்படி வணங்கவேண்டும் தெரியுமா?
    Editor TN Talks

    Related Posts

    திருப்பதிக்கு புறப்பட்ட திருக்குடைகள்

    September 22, 2025

    ரத்த சிவப்பாக மாறும் நிலவு – அரிய நிகழ்வை பார்க்க முடியுமா?

    September 7, 2025

    குச்சனூர் சனீஸ்வரன் கோயிலில் திருக்கல்யாணம்

    August 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.