Close Menu
    What's Hot

    நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் நியூ அப்டேட்

    திட்டக்குடி விபத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்…. அன்புமணி வலியுறுத்தல்

    இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! வைகோ கொந்தளிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மா.சுப்பிரமணியன் மீதான நில மோசடி வழக்கு
    தமிழ்நாடு

    மா.சுப்பிரமணியன் மீதான நில மோசடி வழக்கு

    Editor TN TalksBy Editor TN TalksMay 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Minister Ma Subramanian
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    போலியான ஆவணங்களை பயன்படுத்தி நிலத்தை அபகரித்தாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான வழக்கு விசாரணை வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டதால், இன்று நடைப்பெறுதாக அறிவிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டு பதிவு நடைமுறை நடத்தப்படாமல் வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

    சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை தமிழக அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக இருந்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளதாக
    சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் புகார் அளித்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில்
    போலி ஆவணம் தயாரித்தல், ஏமாற்றுதல், கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மா.சுப்பிரமணியம் மற்றும் அவரின் மனைவி காஞ்சனா இருவர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு காவல்துறை தரப்பில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யபட்டது.

    இந்த வழக்கு தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மீதான குற்ற வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இதனிடேயே இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மா.சுப்பிரமணியன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    இந்நிலையில் இந்த வழக்கை கடந்த முறை விசாரித்த எம்பி, எல்எல்ஏ கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், மற்றும் அவரின் மனைவி மீது மே23 ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தின் வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேங்கடவரதன் முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன் கூட்டியே திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றிருப்பதால் வழக்கு விசாரணை தள்ளி வைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 17 ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தின் வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டதால் இன்று நடைப்பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டு பதிவு நடத்தப்படாமல் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக-வுக்கு என்ன சின்னம்? கட்சி தலைமை ஆலோசனை..
    Next Article மாமியாரிடம் இருந்து மருகளிடம் சென்ற சாவி… பெண் போலீசாருக்கு அபராதம்…
    Editor TN Talks

    Related Posts

    நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் நியூ அப்டேட்

    December 25, 2025

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    December 25, 2025

    கிரிக்கெட்டில் நான் ஒரு ‘ஆப் ஸ்பின்னர்’ – முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் நியூ அப்டேட்

    திட்டக்குடி விபத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்…. அன்புமணி வலியுறுத்தல்

    இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! வைகோ கொந்தளிப்பு

    1,519 படங்கள் ரிலீஸ்! 10 மட்டுமே சூப்பர் ஹிட்!

    தண்டவாளம் நடுவில் நின்ற ஆட்டோ! வந்தே பாரத் ரயில் தப்பியது

    Trending Posts

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    தேசிய சீனியர் பாட்மிண்டன்: உன்னதி, தன்வி முன்னேற்றம்

    December 25, 2025

    கிரிக்கெட்டில் நான் ஒரு ‘ஆப் ஸ்பின்னர்’ – முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

    December 25, 2025

    புதுச்சேரியில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 மாணவர்கள் தப்பியோட்டம்

    December 25, 2025

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.