Close Menu
    What's Hot

    வெளிமாநிலங்களுக்கு கனிமங்கள் அனுப்ப தடை ஏன்? ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்!

    அதிகார நியமனங்களில் புதிய நடைமுறை! ஆளுநர் ஒப்புதலை ரத்து செய்த முதல்வர் விஜய்!!

     புதிய உலகளாவிய வரிவிதிப்பு!. டிரம்ப் மீது 25 மாகாணங்களில் வழக்கு!. இந்தியாவுக்கு நிம்மதி!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»டெல்லி அரசியலில் அதிர்வு.. E20 பெட்ரோலை எதிர்த்து மோடி இல்லம் நோக்கி கெஜ்ரிவால் பேரணி!!
    Featured

    டெல்லி அரசியலில் அதிர்வு.. E20 பெட்ரோலை எதிர்த்து மோடி இல்லம் நோக்கி கெஜ்ரிவால் பேரணி!!

    editor5By editor5August 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 20 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலந்த ஈ20 எரிபொருளுக்கு எதிரான போராட்டம் இன்று உச்சத்தை எட்டவுள்ளது. கட்சி தலைமையகத்தில் இருந்து 100 தொண்டர்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் நோக்கி பேரணி நடத்தி, பொதுமக்கள் கையெழுத்திட்ட மனுக்களை நேரடியாக ஒப்படைக்க அவர் திட்டமிட்டுள்ளார். ஆனால் டெல்லி போலீசார் இந்த பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளதால், நகரில் பதற்றம் நிலவுகிறது. பிரதமர் இல்லத்தைச் சுற்றி காலை முதலே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    நாட்டில் முன்பு பெட்ரோலில் 10 சதவீதம் வரை எத்தனால் கலப்பு நடைமுறையில் இருந்தது. ஆனால் மத்திய அரசு ஈ20 திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது. இதனால் வாகனங்களின் மைலேஜ் குறைவதாகவும், பழைய வாகனங்களில் எஞ்சின் மற்றும் எரிபொருள் அமைப்பில் பாதிப்பு ஏற்படுவதாகவும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    ஆம் ஆத்மி கட்சி இணையதளத்தில் தொடங்கிய கையெழுத்து இயக்கத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். கெஜ்ரிவால் கடந்த மாதம் பிரதமருக்கு கடிதம் எழுதி, தூய பெட்ரோல் விருப்பத்தேர்வு வழங்கவும், ஈ20 விலையை குறைக்கவும் கோரியிருந்தார். ஆனால் பதில் வராததால், இன்று நேரடியாக மனு அளிக்க முடிவு செய்துள்ளார்.

    கெஜ்ரிவால், மத்திய அரசு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழுத்தத்தால் எத்தனால் இறக்குமதியை ஊக்குவிப்பதாகவும், இதில் மறைமுக நோக்கம் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மறுபுறம், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி, ஈ20 எரிபொருளால் வாகனங்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை என்றும், மைலேஜ் சிறிது குறையலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

    அரசு ஆய்வுகளின்படி, 2 முதல் 6 சதவீதம் வரை மைலேஜ் குறையும் வாய்ப்புள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் இதை ஏற்க மறுக்கின்றனர். அனுமதியின்றி பேரணி நடந்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோதல் டெல்லியின் அரசியல் சூழலை மேலும் சூடாக்கியுள்ளது.

    Arvind Kejriwal delhi E20 petrol
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஈரான் விவகாரத்தில் இந்தியாவின் முக்கிய முடிவு!. திடீரென தூதரை மாற்றம் செய்து அதிரடி!
    Next Article “தப்பியோட கூட நேரமில்லை”!. ரஷ்ய கடற்கரையில் ட்ரோன் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 7 பேர் பலி!
    editor5

    Related Posts

    வெளிமாநிலங்களுக்கு கனிமங்கள் அனுப்ப தடை ஏன்? ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்!

    August 4, 2026

    அதிகார நியமனங்களில் புதிய நடைமுறை! ஆளுநர் ஒப்புதலை ரத்து செய்த முதல்வர் விஜய்!!

    August 4, 2026

     புதிய உலகளாவிய வரிவிதிப்பு!. டிரம்ப் மீது 25 மாகாணங்களில் வழக்கு!. இந்தியாவுக்கு நிம்மதி!.

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வெளிமாநிலங்களுக்கு கனிமங்கள் அனுப்ப தடை ஏன்? ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்!

    அதிகார நியமனங்களில் புதிய நடைமுறை! ஆளுநர் ஒப்புதலை ரத்து செய்த முதல்வர் விஜய்!!

     புதிய உலகளாவிய வரிவிதிப்பு!. டிரம்ப் மீது 25 மாகாணங்களில் வழக்கு!. இந்தியாவுக்கு நிம்மதி!.

    “தப்பியோட கூட நேரமில்லை”!. ரஷ்ய கடற்கரையில் ட்ரோன் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 7 பேர் பலி!

    டெல்லி அரசியலில் அதிர்வு.. E20 பெட்ரோலை எதிர்த்து மோடி இல்லம் நோக்கி கெஜ்ரிவால் பேரணி!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.