Close Menu
    What's Hot

    அதிகரிக்கும் குற்றங்கள்: வடமாநிலத்தவர்களை அரசு கண்காணிக்க அண்ணாமலை வலியுறுத்தல்!

    2மாத பெண் குழந்தையை விற்ற தாய்..! சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!

    சபரிமலையில் அன்புமணி-சௌமியா!. குடும்பத்துடன் சாமி தரிசனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • சிறப்புக் கட்டுரைகள்
    • அரசியல்
    • LIFESTYLE
    TN Talks
    Home»இந்தியா»ஒடிசா அமலாக்கத்துறை துணை இயக்குநர் லஞ்ச வழக்கில் கைது: 14 நாட்கள் நீதிமன்றக் காவல்!
    இந்தியா

    ஒடிசா அமலாக்கத்துறை துணை இயக்குநர் லஞ்ச வழக்கில் கைது: 14 நாட்கள் நீதிமன்றக் காவல்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 31, 2025Updated:May 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250531 WA0007
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஒடிசாவைச் சேர்ந்த சுரங்க தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.2 கோடி லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரில், ஒடிசாவில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் துணை இயக்குநர் சிந்தன் ரகுவன்ஷி சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

     

    சுரங்க தொழிலதிபர் ரதிகாந்தா ராவத் என்பவருக்கு எதிரான புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் இருந்து தன்னை விடுவிக்க, அமலாக்கத்துறை துணை இயக்குநர் சிந்தன் ரகுவன்ஷி ரூ.2 கோடி லஞ்சம் கேட்டதாக ரதிகாந்தா ராவத் புகார் அளித்தார்.

     

    இது குறித்து ரதிகாந்தா ராவத் அளித்த புகாரின் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது, லஞ்சப்பணம் ரூ.2 கோடியில் முதல் தவணையாக ரூ.50 லட்சத்தை வியாழக்கிழமை மாலைக்குள் இடைத்தரகர் ஒருவரிடம் செலுத்த வேண்டும் என்று சிந்தன் ரகுவன்ஷி கூறியதாக ரதிகாந்தா ராவத் தெரிவித்தார்.

     

    இதன்படி, ரதிகாந்தா ராவ் இடைத்தரகர் ஒருவரிடம் லஞ்சப்பணத்தைச் செலுத்தியபோது, சி.பி.ஐ. அதிகாரிகள் அந்த இடைத்தரகரை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். பின்னர் நடத்தப்பட்ட விரிவான விசாரணைக்குப் பிறகு, அமலாக்கத்துறை அதிகாரி சிந்தன் ரகுவன்ஷியும் கைது செய்யப்பட்டு சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

     

    விசாரணைக்குப் பிறகு, சிந்தன் ரகுவன்ஷியை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்படவில்லை என்றும், அந்த மனு ஜூன் 4-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    CBI corruption Enforcement Directorate
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதலமைச்சர் வருகைக்காக பந்தல்குடி கால்வாய் துணியால் மறைக்கப்பட்டதால் சர்ச்சை!
    Next Article 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற சரக்கு வேன்… சாலையில் சென்ற பெண் உயிரிழப்பு…
    Editor TN Talks

    Related Posts

    சபரிமலையில் அன்புமணி-சௌமியா!. குடும்பத்துடன் சாமி தரிசனம்!

    June 15, 2026

    E100 எத்தனால் எரிபொருளுக்கு கிடைச்சாச்சு கிரீன் சிக்னல்..!! மத்திய அரசு ஒப்புதல்..!!

    June 15, 2026

    மகாராஷ்டிரா: கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் பாய்ந்த வாகனம்..!! ஒரு குடும்பமே உயிரிழந்த சோகம்..!!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிகரிக்கும் குற்றங்கள்: வடமாநிலத்தவர்களை அரசு கண்காணிக்க அண்ணாமலை வலியுறுத்தல்!

    2மாத பெண் குழந்தையை விற்ற தாய்..! சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!

    சபரிமலையில் அன்புமணி-சௌமியா!. குடும்பத்துடன் சாமி தரிசனம்!

    திடீர் கடல் சீற்றம்..!! வீடுகளுக்குள் புகுந்த கடல் நீரால் தவிக்கும் குமரி மக்கள்..!!

    நடப்பாண்டில் ஓர் இலட்சம் பயணிகள் வருகை – இது புதுவை விமான நிலைய கணக்கு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.