Close Menu
    What's Hot

    கிருஷ்ணகிரியில் 32வது மாங்கனி கண்காட்சி… நாவில் நீர் ஊற வைத்த மாம்பழங்கள்

    டிரம்புடன் கோல்ஃப் ; மறக்க முடியாத தருணம் – ஹாரி கேன் நெகிழ்ச்சி

    இது புதுசா இருக்கே!. குப்பைகளை விற்று ரூ. 1.2 லட்சம் சம்பாதித்த கலைஞர்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்
    Featured

    இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்

    Editor TN TalksBy Editor TN TalksJune 2, 2025Updated:June 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    05
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ‘மதயானைக் கூட்டம்’ மற்றும் ‘இராவணக் கோட்டம்’ போன்ற முக்கிய படங்களை இயக்கிய திரைப்பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் நேற்றிரவு காலமானார்.

    பரமக்குடியைச் சேர்ந்த விக்ரம் சுகுமாரன், சினிமாவில் நடிப்புக்காக சென்னைக்கு வந்தவர். தனது பயணத்தின் ஆரம்பத்தில், தமிழின் முன்னணி இயக்குநரான பாலு மகேந்திராவிடம் 1999 முதல் 2000 வரை உதவியாளராக பணியாற்றினார்.

    பின்னர், வெற்றிமாறன் இயக்கிய ‘பொல்லாதவன்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். சசிகுமார் நடித்த ‘கொடிவீரன்’ படத்திலும் அவர் நடித்துள்ளார். வெற்றிமாறனுடன் இணைந்து ‘ஆடுகளம்’ படத்திற்கு வசனம் எழுதியதும் குறிப்பிடத்தக்கது.

    2013-ம் ஆண்டு கதிர் மற்றும் ஓவியா நடித்த ‘மதயானைக் கூட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்தார் விக்ரம் சுகுமாரன். இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அவர் இயக்கிய இரண்டாவது படம் ‘இராவணக் கோட்டம்’. இதில் சாந்தனு ஹீரோவாக நடித்தார். தற்போது, ஏறுதழுவலை மையமாகக் கொண்டு ‘தேரும் போரும்’ என்ற புதிய படத்தை இயக்கி வந்திருந்தார்.

    இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். இந்த துயரச்செய்தியை நடிகர் சாந்தனு தனது எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தனது இரங்கலில், “அமைதியாக உறங்குங்கள் சகோதரா. உங்களிடம் இருந்து நான் பலமான விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு தருணத்தையும் நான் என்றும் நினைவில் வைத்திருப்பேன். நீங்கள் மிக விரைவாக விலகிவிட்டீர்கள்” என பதிவிட்டுள்ளார்.

    விக்ரம் சுகுமாரனின் திடீர் மரண செய்தி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாளை செம்மொழி நாள் விழா…
    Next Article அண்ணா பல்கலை.மாணவி வழக்கு – ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை
    Editor TN Talks

    Related Posts

    கிருஷ்ணகிரியில் 32வது மாங்கனி கண்காட்சி… நாவில் நீர் ஊற வைத்த மாம்பழங்கள்

    July 11, 2026

    டிரம்புடன் கோல்ஃப் ; மறக்க முடியாத தருணம் – ஹாரி கேன் நெகிழ்ச்சி

    July 11, 2026

    இது புதுசா இருக்கே!. குப்பைகளை விற்று ரூ. 1.2 லட்சம் சம்பாதித்த கலைஞர்!

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கிருஷ்ணகிரியில் 32வது மாங்கனி கண்காட்சி… நாவில் நீர் ஊற வைத்த மாம்பழங்கள்

    டிரம்புடன் கோல்ஃப் ; மறக்க முடியாத தருணம் – ஹாரி கேன் நெகிழ்ச்சி

    இது புதுசா இருக்கே!. குப்பைகளை விற்று ரூ. 1.2 லட்சம் சம்பாதித்த கலைஞர்!

    இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் புதிய வரலாறு ; கோலி, சச்சினால் கூட செய்ய முடியாத சாதனை!

    டாஸ்மாக் மதுபானங்களுக்கு ரூ.10 செஸ் வரி? – அரசு திடீர் முடிவு ஏன்?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.