Close Menu
    What's Hot

    வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு… பாதுகாப்பு வளையத்தில் டெல்லி செங்கோட்டை..!!

    டிரம்பின் எச்சரிக்கைக்குப் பிறகு டெஹ்ரானில் வெடிச்சத்தம்; ஈரான் விளக்கம்

    திருச்சி கிழக்கில் விஜய்யின் நிழல் அரசியல்… ஜான் ஆரோக்கியசாமிக்கு ஜாக்பாட்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பஞ்சாப்…
    விளையாட்டு

    ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பஞ்சாப்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 2, 2025Updated:June 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    09
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு மும்பை அணியை வீழ்த்தி, பஞ்சாப் கிங்ஸ் அணி முன்னேறியது.

    இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டிகள் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா, ஜானி பெர்ஸ்டோ களமிறங்கினர். வெறும் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டாய்னிஸ் பந்தில் ரோகித் ஷர்மா ஆட்டமிழந்தார். மறுபுறம் தடாலடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பெயர்ஸ்டோ 38 ரன்கள் சேர்த்து வியாசக் பந்தில் வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் இணை பஞ்சாப் அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தது. இருவரும் தலா 44 ரன்கள் குவித்த நிலையில், அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். பின்னர் இணைந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, நமன் திர் ஜோடி இறுதிக்கட்டத்தில் ரன்களை குவிக்க போராடினர். ஹர்திக் 15 ரன்களும், நமன் திர் 37 ரன்களும் எடுத்து தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் சேர்த்தது மும்பை.

    பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ப்ரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் அடித்து ஆட முயன்றனர். இதில் பிரப்சிம்ரன் சிங் 6 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ப்ரியன்ஷ் ஆர்யா 20 ரன்கள் சேர்த்து அவுட்டானார். ஜோஷ் இங்கிலிஷ் தடாலடியாக ஆடி 21 பந்தில் 38 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், நேஹல் வதேரா இணை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. குறிப்பாக கேப்டன் ஷ்ரேயாஸ் அற்புதமான ஒரு இன்னிங்சை ஆடினார். 41 பந்தில் 8 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் விளாசி 87 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதுவும் வெற்றிக்கான இலக்கை சிக்சர் அடித்து நிறைவு செய்தது பஞ்சாப் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது. வதேரா தன் பங்குக்கு 48 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில் 6 பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றார். இதன்மூலம் நாளை நடைபெறும் நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பெங்களுர் அணியை, பஞ்சாப் எதிர்கொள்கிறது.

    டெல்லி, கொல்கத்தா, தற்போது பஞ்சாப் என மூன்று வெவ்வேறு அணிகளின் கேப்டனாக இருந்து தனது அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் படைத்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅண்ணா பல்கலை.மாணவி வழக்கு – ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை
    Next Article திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியது அதிமுக – இபிஎஸ்
    Editor TN Talks

    Related Posts

    தொடரை இழந்த இந்தியா! ஆறுதல் வெற்றியுடன் கௌரவத்தை மீட்குமா?. இன்று கடைசி டி20 போட்டி!

    July 11, 2026

    ஸ்மிருதி மந்தனாவின் இரட்டை சாதனை!. லார்ட்ஸ் டெஸ்டில் அரைசதம் விளாசி முத்திரை!

    July 11, 2026

    விம்பிள்டன் 2026!. ஜோகோவிச்சை வீழ்த்தி ஜானிக் சின்னர் அபாரம்!. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!.

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு… பாதுகாப்பு வளையத்தில் டெல்லி செங்கோட்டை..!!

    டிரம்பின் எச்சரிக்கைக்குப் பிறகு டெஹ்ரானில் வெடிச்சத்தம்; ஈரான் விளக்கம்

    திருச்சி கிழக்கில் விஜய்யின் நிழல் அரசியல்… ஜான் ஆரோக்கியசாமிக்கு ஜாக்பாட்?

    பாதுகாப்புத் துறையின் புதிய சக்தி மையமாகும் ஆந்திரா – அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்

    ” தவெக அரசு இந்து விரோத அரசாக மாறிவிட்டது” –  நயினார் நாகேந்திரன் கண்டனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.