தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு நேற்று மிகுந்த ஆனந்தமாக முடிந்தது. இப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார், இசையை அனிருத் அமைத்துள்ளார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
இதனுடன் தன்னுடைய சினிமா பயணத்தை முடித்துக்கொண்டு, இனி முழுமையாக அரசியலில் ஈடுபட இருப்பதாக தளபதி விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ரசிகர்கள் மனதில் நெகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திய இந்த முடிவால், தமிழக அரசியல் களத்தில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.
தளபதி விஜய் முழு நேர அரசியல் பயணத்தை இன்று முதல் தொடங்குகிறார் ‘ஜனநாயகன்’ திரைப்படம் அவரது கடைசி திரைப்படமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்பது ரசிகர்களுக்கு உணர்ச்சிபூர்வ தருணமாகும்.